104
வெள்ளை அறிக்கையிலே என்ன மாதிரியான நிலைமைகளைக் காண விரும்புகிறார்களோ அவைகளையெல்லாம் அங்கே பரீட்சித்துப் பார்த்தாலும், அவைகள் அப்படியே ஒப்புக்கொள்ள வேண்டிய முடிவுகள் அல்ல என்று எடுத்துச் சொன்னதை அரசியல் பெருந்தன்மையாக நான் கருதவில்லை, சர்க்காருடைய நல்ல நோக்கமாகவே கருதி அதை நான் வரவேற்கிறேன்.
இன்றையதினம் கிராமப்புறங்களிலே உள்ள நிலைமைகளைத்தக்கபடி சீர்திருத்துவதற்காக இந்த முறை கையாளப்படுகிறதா, அல்லது கிராம நல அபிவிருத்தி சமுதாய நல அபிவிருத்தி என்று போடப்பட்டிருக்கும் திட்டங்கள் வெற்றி பெறுவதற்காக அந்த முறையைக் கையாளுகிறார்களா என்பது உண்மையிலேயே குழப்பமாகயிருக்கிறது. நிதி அமைச்சர் குறிப்பிட்ட கருத்துக் குழப்பம், கேட்பவர்களிடையே மட்டுமல்ல, சொல்லுபவர்ககளிடையேயும் பெரும் அளவுக்கு இருக்கிறது ஸ்தல ஸ்தாபனக்களை பிரித்து அமைக்கவேண்டுமென்ற கருத்து சமுதாய நலத் திட்டங்களைப்பற்றி எண்ணிப் பார்க்காமல் இருந்த காலத்திலேயே, ரத்தினசபாபதி முதலியார் காலத்திலேயே அந்த யோசனைகள் இந்த நாட்டிலே வலியுறுத்தப்பட்டுக்கொண்டு வந்திருக்கின்றன. இடையிலே ஏற்பட்ட ஒரு புதிய முறை முன்றைக்கு பொறுத்தமாக இருக்கிறதா, இல்லையா என்பதை ஆராயவேண்டுமென்பது மட்டுமல்ல, இருக்கின்ற ஸ்தல ஸ்தாபனங்கள் அமைப்பிலோ, அல்லது புதியதாக ஏற்பட இருக்கின்ற ஸ்தல ஸ்தாபனங்கள் அமைப்பிலோ, சமுதாய நலத்திட்டங்கள் நிறைவேற்றுவதற்காக அவைகள் கருவியாக பயன்படவேண்டுமென்ற முறையில் இந்தப் பிரச்னை அணுகப்படுகிறதோ என்று நான் அஞ்சுகிறேன். நான் அப்படி அஞ்சத்தக்க அளவில் நிதி அமைச்சரவர்கள் சமுதாய நலத்திட்டத்தைப்பற்றி தமது உரையிலே 20 நிமிடங்கள் வலியுறுத்தி அது சரியான முறையில் நடைபெற வேண்டுமானால் கிராமமக்கள் அக்கரை காட்டவேண்டும், கிராம மக்களுக்கு அதில் அக்கரை இருக்கவேண்டும். அவர்களுடைய அமைப்பிலும் அதற்கெல்லாம் வசதிகள் இருக்கவேண்டுமென்று பரிசோதித்தார்.
சாதாரணமாக எங்கள் பக்கத்தில் மாடு வாங்கப்போகும் போது பெண் பார்த்துக்கொண்டு வருவது வாடிக்கை. அதே போல மாடு வாங்கப்போன இடத்தில் மாட்டையும் வாங்கிக்கொண்டு அத்துடன் பெண்ணையும் வாங்கி வருவதுபோல், சமு-