உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பட்ட காரியங்களிலும், வேறு பல காரியங்களிலும் ஆங்கிலத்தில் இரண்டு பதங்களை உபயோகப்படுத்துவார்கள். நல்ல முறையில் நிர்வாகம் நடைபெறுவதற்கு "எகனாமிக் யூனிட்டாக" இருக்க வேண்டுமென்று சொல்லுவார்கள். அதாவது பொருளாதாரத் துறையிலே எல்லாவித வசதிகளையும் செய்துகொள்ள வகை இருக்கவேண்டும். அல்லது பொலிடிகல் யூனிட்" அரசியலுக்கேற்ற அமைப்பாக இருக்கவேண்டுமென்று சொல்லுவார்கள், இப்பொழுது ஏற்படுத்தப்போகிற பஞ்சாயத்து யூனிட்டுகள் "எகனாமிக் யூனிடாகவுமில்லை," "பொலிடிக்கல் யூனிட்டாகவுமில்லை," 'பொலிடிக்கல் யூனிடாக" இருக்கவேண்டுமென்றால் ஏற்கெனவேயிருக்கின்ற எம் எல் ஏக்கள் தொகுதிகளை அந்தத் தொகுதிகளாக வைத்திருக்கலாம். "எகனாமிக் யூனிடாக" இருக்க வேண்டுமென்றால், பொருளாதார நிபுணர்கள் எதை "எகனாமிக் யூனிட்" என்று சொல்கிறார்களோ அம்மாதிரி பிரிக்கலாம். இரண்டையும் விட்டு விட்டு குருடன் கோலை வீசி, நொண்டி காலை எடுத்து வைப்பதுபோல இப்பொழுது இருக்கிற இரண்டு பிளாக்குகளை ஒன்றாகச் சேர்த்து ஒருவகை யூனிடாக வைத்திருப்பதாக எடுத்துச்சொல்வது அவ்வளவு பொருத்தமாக எனக்குத் தெரியவில்லை. கிராமத்தில் இருக்கின்ற மக்களுக்கு யாரிடம் எதற்கு எப்படி அணுகுவது என்பது தெரியவில்லை. பல்வேறு அதிகாரிகளைப் போட்டிருக்கிறார்கள். ரெவின்யூ இலாகா ஒன்று இருக்கிறது. அவர்களும் கிணறு வெட்டுகிறார்கள், "லோகல் டெவலப்மெண்டு" இலாக்கா ஒன்று இருக்கிறது. அவர்களும் கிணறு வெட்டுகிறார்கள். சமுதாயநலத் திட்டத்தின் கீழும் கிணறுகள் வெட்டுகிறார்கள், என்னுடைய தொகுதியில் ஒரு இடத்தில் ஒரு கிணறு வெட்டப்பட்டிருக்கிறது, அதற்குக் கைபிடிச் சுவர் இல்லை. கைபிடிச் சுவர் ஏன் கட்டப்படவில்லை என்று கேட்டால் "அதை நாங்கள் வெட்டவில்லை. சமுதாய நலத் திட்டத்தின் கீழ் வெட்டியிருக்கிறார்கள். அவர்களைக் கேளுங்கள்" என்று ரெவின்யூ இலாகாவினர் சொல்வதாகவும், "நாங்கள் வரவில்லை. அவர்களைத்தான் கேட்கவேண்டும்" என்று இவர்கள் சொல்வதர்கவும் அறிகிறேன். இன்றைக்கும் கைபிடிச் சுவர் இல்லாமல் கிராம மக்கள் அந்தக் கிணற்றை உபயோகித்து வருகிறார்கள். இப்படித் தாறுமாறாகக் காரியங்கள் நடைபெறுவதற்குக் காரணம் பொதுமக்கள அந்தக் காரியத்திற்கு ஆதரவு தராததுதான். பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான், ஆதரவு தந்து பங்குகொண்-