110
ஆகவே பொதுமக்களுக்கு இது கண்துடைப்பு வேலையில்லை என்கிற நம்பிக்கை உண்டாகும் வகையில் நல்ல முறையில் இவர்கள் சமுதாய அபிவிருத்தித் திட்டங்களைப் போட்டால்தான் அவர்கள் தங்கள் ஆதரவைத் தர முன்வருவார்கள். இந்தமாதிரியாகச் செய்தால் அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெற முடியாது என்று தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவதற்குச் செய்யவேண்டிய முறை, கையாள வேண்டிய கொள்கை வேறு. அதைக் கொண்டுபோய் ஸ்தல ஸ்தாபனங்களுடன் பிணைப்பது என்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை.
ஒரு யந்திரத்தினுடைய கருவியைக் கொண்டுபோய் இன்னொரு இயந்திரத்தோடு சேர்க்கும்போது அது பொருந்துமா என்பதைப் பார்த்துப் பொருத்த வேண்டும்; இல்லாவிட்டால் அது முறிந்துவிடும், அல்லது இந்த இயந்திரத்தின் ஓட்டத்தைத் தடைபடுத்தும் என்பதாக நிதி அமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதற்கு ஒரு உதாரணம் அவர்கள் ஜில்லாவிலேயே காட்ட முடியும், மாடுகள் இழுக்கும் வண்டிகளுக்கு டையர் சக்கரங்களைப் போடுகிறார்கள். டையர் சக்கரம் போட்ட வண்டி தார்ரோடில் தான் நன்றாகப்போகுமே தவிர, மண் ரோடில் போகும் அந்த வண்டிகளுக்கு டையர் சக்கரங்களைப் பொறுத்துவது பொருந்தாத ஒன்றை கொண்டுபோய் பொருத்துவதாகத்தான் இருக்கிறது. அதே முறையில் எல்லா இடத்திலும் அனுசரிக்க வேண்டாமென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்தல ஸ்தாபனங்களைத் திருத்தி அமைக்கவேண்டுமென்ற கருத்தையும், சமுதாய நலத்திட்டம் வெற்றிபெற வேண்டுமென்ற கருத்தையும் ஒன்றாகப் பிணைப்பது சரியானது அல்ல. அந்தக் கண்ணோட்டத்தில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிற அறிக்கையில் நான் காணுகின்ற குறைபாடு இந்த அடிப்படையில்தான். சாதாரணமாக வெள்ளை அறிக்கையில் இருக்கிற மற்ற தத்துவங்களைப் பற்றியும் அவநம்பிக்கையிருக்கிறது. இங்கே பேசியவர்களெல்லோரும் எல்லாக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள்—ஸ்ரீ முத்தையா அவர்களைத்தவிர மற்ற யாவரும்—வரவேற்கவில்லை. ஓரளவுதான் வரவெற்கிறேன் என்று ஸ்ரீ முத்தையாவும் குறிப்பிட்டார்கள். அந்த ஓரளவுதான் என்ன என்பதை அவர் இங்கே சொல்லாவிட்டாலும் பொறுக்குக் கமிட்டியிலாவது ஒரு சமயம் சொல்வாரோ என்று நினைக்கிறேன். சிந்தனைக்கு உரியதாகக் காணப்படுகிற-