உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

விஷயங்களை யெல்லாம், போட்டிருக்கிற பொறுக்கு கமிட்டி நன்றாக அலசி ஆராய்ந்து பார்க்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன்.

மற்றொன்று பஞ்சாயத்து நடக்கிற தேர்தலைப்பற்றி அரசியல் கட்சிகளுக்கு எல்லாம் சீறிய யோசனை ஒன்றை நிதி அமைச்சரவர்கள் சொன்னார்கள் அரசியல் கட்சிகளையெல்லாம் யோசிக்கும்படியாகக் கேட்டுக் கொண்டார்கள். 'அங்கேயெல்லாம் அரசியல் கட்சி மனப்பான்மை வளருவது நல்லதா? அரசியல் கட்சியின் சார்பில் பஞ்சாயத்துப் போட்டியிடுவது நல்லதா?” என்று கேட்டார்கள்.

மன்றத் தலைவரவர்களே, உங்கள் மூலமாக நிதி அமைச்சர் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன். முன்பு நான் சார்ந்திருந்த ஜஸ்டிஸ் கட்சி ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அரசியல் கட்சியின் சார்பில் போட்டிபோடக் கூடாது என்கிற முறையைத்தான் அந்தக் காலத்தில் வகுத்திருந்தார்கள். காங்கிரஸ்காரர்கள்தான் அந்த முறையைத் தகர்த் தெறிந்தார்கள். கட்சியின் சார்பில் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் போட்டியிடும் வழக்கத்தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கு அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடாது என்கிற முறையை வகுக்க விரும்பினார்கள் என்றால்- ஆங்கிலத்தில் சொல்வதுண்டு—"ஜென்டில்மென்ஸ் அக்ரிமெண்டு" என்பதாக—அப்படி எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுகூடி அந்த முடிவுக்கு வருவார்களானால் நான் சார்ந்திருக்கிற கட்சியின் சார்பில் காங்கிரஸ்காரர்கள் கொண்டுவருகின்ற அப்படிப்பட்ட முடிவுக்கு முழுக்க ஒத்துழைக்கத் தயாராய் இருப்பேன் என்று இன்றையதினம் சொல்லிக்கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியின் கருத்தாகத்தான் அது இருக்குமென்று நம்பி இதைச் சொல்லிக்கொள்கிறேன். இது நிதி அமைச்சரவர்களுடைய சொந்தக் கருத்து என்றால் தனிப்பட்ட முறையில் உயர்ந்த கருத்தைத் தெரிவித்ததற்காக என் மதிப்பு. அதன்பேரில் அவர் எடுத்துக்கொள்கிற நடவடிக்கை எப்படி இருக்குமோ அது எதிர்காலத்தில்தான் தெரியவேண்டும்.

ஆனால் ஒன்று, பஞ்சாயத்து அரசியல் கட்சியின் சார்பில் தேர்தலுக்கு நின்று சண்டைபோட்டுக்கொள்வது நாகரிகச் சண்டையாக இருந்தாலும் இருக்கும். காரணம் பஞ்சாயத்து தேர்தல்கள் ஏதாவது ஒரு கட்சியின் சார்பில்தான் நடைபெறக்கூடியதாக