112
இருக்கும். கிராமங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும் வடக்குத்தெரு ஒரு கட்சி, தெற்குத் தெரு ஒரு கட்சி. இரண்டுக்கும் சண்டை, மேட்டுத் தெருவிற்கும்; கிழக்குத் தெருவிற்கும் சண்டை; அல்லது சாதியின் பெயரால் சண்டை; அல்லது பெரிய வீட்டுக்காரருக்கும், சின்ன வீட்டுக்காரர்களுக்கும் சண்டை; என்று இப்படித்தானிருக்கும். ஆனால்—இந்தச் சண்டைகளையெல்லாம்விட அரசியல் கட்சிகளுக்குள் ஏற்படுகிற சண்டை ஒருகால் நாகரிகமான சண்டையாகவே இருக்க முடியும். ஆனால் ஜஸ்டிஸ் கட்சி காலத்தில் அரசியல் கட்சிகளின் சார்பில் ஸ்தல ஸ்தானங்களின் தேர்தல் நடைபெறக் கூடாது என்று இருந்த முறையை மாற்றி அமைத்த காங்கிரஸ்காரர்கள்—அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிடுவது நல்லதா என்பதை யோசித்துப் பார்க்கவேண்டுமென்று சொல்கிற முறைக்கு இறங்கி வந்திருக்கிறார்களென்றால் அதற்குக் காரணமென்ன? தாங்கள் எதிர்பார்த்த நோக்கம் அதனால் பூர்த்தி அடையவில்லை—இல்லாவிட்டால் தாங்கள் எதிர்பார்த்ததுபோல் இல்லாமல் பல இடங்களில் தங்களுக்கே நட்டம் அதிகமாக வந்துவிட்டது என்கிற காரணமாக இருந்தாலும் இருக்கலாம் எப்படியிருந்தாலும் அது நல்ல யோசனை என்பதனால்தான் அந்தக் கருத்து உருவானால் எங்கள் கட்சியின் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைக்கும். இதைப்பற்றி எல்லாக் கட்சிகளும் ஒன்றுகூடி பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டால் அதை வரவேற்கிறேன் என்று எடுத்துச் சொல்லி, நாம் செய்கின்ற மாறுதல் ஸ்தல ஸ்தாபனங்களுக்கு அதிகாரம் கொடுத்து அவை நல்ல முறையில் செயலாற்ற வேண்டுமென்பதாக இருக்கவேண்டுமே தவிர சமுதாயநல அபிவிருத்தித் திட்டங்களை எப்படி வெற்றிபெறச் செய்வது என்கிற காரணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
காரணம் சமுதாய நல அபிவிருத்தி திட்டங்கள் என்பன ஐந்து வருடத்திட்ட அடிப்படையில் போடப்படுவது, நிரந்தரமான திட்டங்கள் இல்லை, முதல் ஐந்து வருடத்திட்டம் முடிந்தது. இரண்டாவது ஐந்து வருடத்திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் மூன்றாவது ஐந்து வருடத் திட்டத்தையும் இவர்கள் கொண்டுவரலாமா? அனுமதித்தால் நான்காவது ஐந்து வருடத் திட்டத்தையும் கொண்டுவரக் கூடும். இப்படி அவை நிரந்தரமான திட்டங்களாக இல்லாமல் குறிப்பிட்ட வருடங்களைக்-