114
வத்தை நிலைநிறுத்திவிடமுடியாது. தேசிய கெளரவத்திற்கு இழுக்கையுண்டாக்கிக்கொண்டிருப்பவர்களை சும்மா விட்டுக்கொண்டிருக்க முடியுமா? பைத்தியக்காரர்களென்றால் அவர்களைப் பிடித்து உள்ளே போடத்தான் வேண்டும். சட்டம் இருக்கிறது என்பதாக போலீஸ் அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
ஒருநாட்டிலே பைத்தியக்காரர்கள்குறைவாக இருப்பது நாட்டுக்கும் நல்லது. ஒரு நாட்டிலே பைத்தியக்காரர்கள் குறைவாக இருப்பது என்பது நாட்டு ஆட்சிக்கும் பெருமை, " எங்கள் நாட்டிலே பைத்தியக்காரர்கள் அதிகமாக இருக்கிறார்கள், அவர்களை அடக்கச் சட்டங்கள் போட்டிருக்கிறோம் என்று சொல்வது போலீஸ் அமைச்சருக்கோ, அவருடைய நிர்வாகத்திற்கோ பெருமையைத் தேடித் தராது. ஆகவே தேசீய கெளரவத்தைப் பாதுகாக்கப் புதிய சட்டங்கள் தேவையில்லையென்று சொல்லுகிற நேரத்திலே யாரோ ஒரு பைத்தியக்காரர் காந்தியாரின் படத்தைக் கொளுத்துகிறார் என்றால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியுமா?" என்று இவர்கள் சட்டத்தைக் கொண்டு வரும்போது ஒன்று சொல்லிக்கொள்வேன். நீங்கள் காந்தியாரின் உயிரைக் காப்பாற்றத் தயாராயில்லா விட்டாலும், காந்தியாரின் படத்தைக் காப்பாற்றவாவது முயற்சி எடுத்துக்கொண்டீர்களே, பெருமைதான்" என்று கூற விரும்புகிறேன்.
சாதிவெறியினால்தான் காந்தியார் கோட்சேயினால் கொல்லப்பட்டார் என்பதும், சாதி வெறியை அடக்க காந்தியார் முயற்சி எடுத்ததுதான் காத்தியாரின் உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த உண்மை.
காந்தியாரின் உயிரையே வாங்கிவிட்ட சாதி வெறியை அடக்குவதற்கு நாங்கள் சட்டம் கொண்டு வந்திருக்கிறோம் என்று சொன்னால் நான் அதைப் பாராட்டுவேன். உலகம் உங்களைப் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும். ஒன்றை நான் இந்த மன்றத்தில் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். காந்தியாரின் சமாதிக்கு மாலை போட்டுவிட்டு கதர் கட்டிக்கொண்டிருக்கிற காங்கிரஸ்காரர்கள் தாம் இன்றைக்கு இருக்கிறார்கள். இவர்களெல்லாம் ஒருகாலத்தில் பெரியாரின் மாளிகையில் தங்கியிருந்தவர்கள்தாம். காந்தியார் சாதி வெறியினால் கொல்லப்பட்ட நேரத்திலே, காந்தியார் இருந்த இந்த நாட்டுக்குக் காந்தி நாடு என்பதாகவும். இந்நாட்டிலுள்ள மதத்திற்குக் காந்தி மதம் என்றும் பெயர்