115
வைக்கவேண்டுமென வெளிப்படையாகச் சொன்னவர் பெரியார்தான் என்பதை அந்தப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறவர்கள் மறந்திருக்கலாம் ஆனால் நாடு மறந்திருக்காது. நாட்டு மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். காந்தி பெரியாரின் மாளிகையில் தங்கியிருந்திருக்கிறார். காந்தியின் நினைவாக தன் தமக்கையின் பெண்ணுக்கு பெரியார் "காந்தி" என்ற பெயர் வைத்திருக்கிறார்கள்.
காந்தியாரை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியார் தன் செல்வாக்கை அதிகமாக்கிக்கொண்டதன் காரணமாக—அன்றைக்கு அவர் உயிரைக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்--அவர் படத்தையாவது காப்பாற்றுவோமென முன்வந்திருக்கிறவர்கள் ஒரு உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். "காந்தியின் படத்தைக் கொளுத்துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்துவேன்” என்று பெரியார் சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின்பேரில் இருக்கிற வெறுப்பினாலல்ல, தேசீய கொடிக்கு, தேசீய சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்கவேண்டுமென்கிற எண்ணத்தினாலல்ல, இவைகளை எந்தக் காரணத்திற்காகக் "கொளுத்தச் சொல்லுகிறேன், கிழிக்கச் சொல்லுகிறேன்" என அவர் எடுத்துச் சொல்லுகிறாரோ, அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்குவதற்கு சர்க்கார் முயற்சியெடுத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக—அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காகச் சொல்லப்படுகிற விஷயங்கள்தான். அவைகளின்பேரில் அவருக்கு வெறுப்பு இல்லையென்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை உணர்ந்துகொண்டு அவர் எந்தக் காரணங்களுக்காக உள்ளம் குமுறிக்கொண்டிருக்கிறாரோ அதை நிறைவேற்ற இவர்கள் ஏற்பாடு செய்தார்களா?
அவைகளைச் செய்யாத வரையில் திரு. சங்கரன் சொன்னதுபோல மூன்றுக்குப் பக்கத்தில் ஸைபரைப்போட்டு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்றாலும்கூட இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சுதந்திரம் அடைந்து எட்டாண்டு காலம் ஆனபிறகும்கூட சாதி ஒழிப்புக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியின் அறிவிப்புத்தான் பெரியாரின் செய்கை, எங்கள் தேசீயச் சின்னங்களுக்கு அவமானத்தை உண்டாக்குவது என்றால், "எங்கள் அரசியல் சட்டத்திற்கு இழிவை உண்டாக்குவது என்றால் அதை எப்படித் தடுக்காமல் பொறுத்துக்கொண்டிருக்க முடியும்?" எனப்-