116
போலீஸ் அமைச்சர் கூறி, அப்படிச் செய்கிறவர்களுக்கு மூன்று வருட தண்டனை அளிக்கப்படும் எனச் சொல்லலாம். திரு. கல்யாண சுந்தரம் அவர்கள் அதை இன்னும் கூடுதல் ஆக்கவேண்டும் என்று சொல்லலாம். இந்த அளவில் திரு சங்கரன் மூன்று வருடத்தை முப்பது வருடம் எனத் திருத்தவேண்டுமென்று பேசலாம். உண்மையில் இவர்கள் எல்லாம் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று யோசிக்கிறார்களே தவிர, நோயினுடைய மூலகாரணத்தை அறிந்துகொள்ளச் சற்று யோசிக்கத் தவறிவிட்டார்கள் என்று சொல்ல விரும்புகிறேன்.
பைத்தியக்காரன் என்ற உதாரணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் உண்மையிலேயே பைத்தியக்காரர்களாக இருக்கலாம். அவன் கருத்துக்கு ஒவ்வாத கருத்தை இவன் சொன்னாலும் பைத்தியக்காரனென்று பிறரால் இவன் பட்டம் சூட்டப்படுகிறான். கனம் போலீஸ் அமைச்சரவர்கள் பைத்தியக்காரனை அடக்கச் சட்டம் இல்லையா? அப்படித்தான் இது எனப் பேசியபோது பைத்தியக்காரன் என்று யாரைச் சுட்டுகிறீர்கள், பெரியாரையா என்று திரு பழனிசாமி கேட்க. "அப்படித் தான் குறிப்பிடவில்லை" என அவர் மறுத்தது, அரசியல் பெருந்தன்மை என்ற முறையில் நான் வரவேற்கிறேன். ஆனால் அவர் பேசிய பேச்சு இந்த எண்ணத்திற்குத்தான் சபையிலுள்ளவர்களை இழுத்துக் கொண்டு செல்லும்.
ஆகையால் அவர் ஒப்புக்கொள்வது உண்மையென்று வைத்துக்கொண்டாலும் பைத்தியக்காரர்களை அடக்குவதில் வீட்டாருக்குள்ள பொறுப்பு வேறு, நாட்டாருக்குள்ள பொறுப்பு வேறு, அரசியலாருக்குள்ள பொறுப்பு வேறு. பைத்தியக்காரனென்றால் அவன் வீட்டார் அவன் பைத்தியத்திற்குக் காரணமான மனப் பிராந்தியை எப்படிப் போக்குவது என்றே முயற்சி செய்வார்கள். அந்த முறையில் பெரியாரவர்களுடைய மனக் குமுறலை—இப்படியெல்லாம் இவர் செய்வேனென்று சொல்வதற்கு மூலகாரணமான மன எழுச்சியை அவர்கள் போக்குவதற்கு என்ன செய்தார்கள்? இவர்கள் பெரியாரை ஒரு பைத்தியக்காரனென்று சொன்னாலும்கூட எண்பது ஆண்டுகள் சென்ற பெரியார் தமிழகத்தில் மிகச் சிறந்த செல்வாக்கைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அவர்களில் யாரும் மறுக்க முடியாது. அந்தச் செல்வாக்குத் தங்களுக்கு இன்றைக்குப் பயன்படவில்லையே,