118
அவ்வுணர்ச்சியென்று சொல்வார்கள். இன்றைக்கு தேசீயச் சின்னங்களைக் கொளுத்துவதற்கு முன்னர்—அன்றைக்கு மதச் சின்னங்களை—பிள்ளையார் விக்ரகத்தையும், ராமர் படத்தையும் பெரியாரவர்கள் உடைத்துக் கொளுத்தினார்களே. அந்த நேரத்தில் நீங்களென்ன சொன்னீர்கள்? "பிள்ளையார் உருவத்தை அவர் உடைக்க உடைக்கத்தான் பிள்ளையாருக்கு அதிகப் பெருமை உண்டாகிறது? என்று ரொம்ப யுக்தியாகச் சொன்ன உங்கள் வாதம் இந்த நேரத்தில் மங்கிப்போய் விட்டதா? அன்றைக்குப் பிள்ளையாரைப்போட்டு உடைத்து, ராமர் படத்தைக் கொளுத்திக்கொண்டிருந்தபோது சமுதாய மக்களின் உள்ளத்திலே ஆழ்ந்து பதிந்திருக்கும்படியான உணர்ச்சி புண்பட்டிருக்கிறது? அப்போது அதனால்தான் பிள்ளையார் பெருமை உயர்கிறது என்று சொல்லிச் சும்மாயிருந்த நீங்கள் அந்த தத்துவத்தை உண்மையாக உணர்ந்து பேசியிருந்தால் இப்போது இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கவசியமென்ன? இதனால் யாருடைய மனம் புண்படும்? இந்தக் காரியம் ஏற்கெனவே கண்முன்னால் செய்து காட்டப்பட்டுவிட்டது.
பாட்னா நகரத்தில் கிளர்ச்சி செய்யப்பட்ட நேரத்தில் காந்தியார் படத்தைக் கொளுத்தியிருக்கிறார்கள். நேருவுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்திருக்கிறார்கள். அரசியல் சட்டத்தைக் கிழித்தெறிந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நீங்களே அரசியில் கூட்டத்தை ஏழு ஆண்டுகளுக்குள்ளாகப் பத்துதடவை கொளுத்தியிருக்கிறீர்கள். அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் காரியத்தைத்தான் ரொம்ப நாகரீகமாகப் பத்து தடவை திருத்தியிருக்கிறீர்கள். ரொம்ப புனிதமான சட்டமென்று போற்றப்படுகிற அந்தச் சட்டம் உங்களாலேயே திருத்தப்படுவதென்றால் என்ன? கொளுத்தப் பட்டதென்று தானாகிறது.
நிதி அமைச்சர் திரு. சி. சுப்பிரமணியம் : இந்தவார்த்தையை நான் அறிஞரிடத்திலிருந்து எதிர்பார்க்கவில்லை.
திரு. சி. என். அண்ணாதுரை : நமது போலீஸ் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள் "நாங்களெல்லாம் அரசியல் சட்டத்தை வேதமென்று வைத்துக்கொண்டிருக்கிறோம்" என்பதாக, அதை அவர்கள் வேதமாக வைத்துக்கொண்டு பூசிப்பதை யாரும் தடுக்கமாட்டார்கள். ஆனால் மிகப் பெரும்பாலோராகயிருக்கின்ற