125
திரு, சி. என். அண்ணாதுரை: பதினாயிரம் பேர்கள்தான் வந்திருந்தார்கள் என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். ஐம்பதினாயிரம் என்ன, நான்குலட்சம் பேர்கள் வந்தார்களென்று சில பத்திரிகைகள் எழுதியிருந்தது. அவனவன் மனைவி அவனவன் கண்ணிற்குப் பிடிக்கும் என்பதுமாதிரித்தான் இது இருக்கிறது. உங்கள் ஆட்களைக் காணும்போது நீங்கள் ஒருவிதம் எண்ணுவீர்கள், வேறு ஆட்களைப் பார்க்கும்போது வேறுவிதம் எண்ணுகிறீர்கள். இந்தக்காரியத்தைச் செய்யவேண்டுமென்று அவர் சொல்கிற நேரத்தில் அதற்கு "ஆம்" என்று சொல்கிறவர்களை பயித்தியக்காரர்களென்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் இன்றையதினம் நிம்மதியாய் உட்கார்ந்திருப்பதின் காரணமாக, பெரியார் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் இத்தனை பேர்களும் பயித்தியக்காரர். அப்படி அவர்களைப் பயித்தியக்காரர்களென்றால், நீங்கள் இன்று தமிழ் நாட்டிற்கு அதிகாரிகளல்ல, பயித்தியக்காரர்களடங்கிய நாட்டிற்குத்தான் அதிகாரிகளாவீர்கள். சாதியை ஒழிப்பது இந்த அரசாங்கத்தின் கடமையென்று 10 தினங்களுக்கு முன்பு நேரு அவர்களே சொன்னார்களே, அந்த அடிப்படையில் பெரியாரைச் சந்தித்துப் பேசினால், அவரைவிட தனிப்பட்டவர்களிடத்தில் மரியாதை காட்டுகிறவர், அவரைவிட தாட்சண்யத்திற்கு கட்டுப்படக் கூடியவர், அவரைவிட, எதிரியின் மனப்பான்மையை அறிந்து தன் மனப்போக்கை மாற்றிக் கொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் தமிழகத்திலேயே பார்க்கமுடியாது. சட்டங்களைச் செய்வதினால் பலனில்லை. நம் போலீஸ் அமைச்சர் அவர்கள் இச்சட்டம் குறித்து பேசியபோது மிகவும் உணர்ச்சியோடு பேசினார்கள். அவர் இவ்வளவு உணர்ச்சியோடு பேசினதை நான் இதுவரை பார்த்ததில்லை. நான்கூட நினைத்திருக்கிறேன், போலீஸ் அமைச்சருக்கு உணர்ச்சியே வராதோ என்று. அவர் உணர்ச்சியோடு பேசியதற்கு, அவரது உணர்ச்சிக்கு நான் மதிப்பளிக்கிறேன். தேசீயக் கொடி அவமதிக்கப்பட்டால் அது தன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள் கருதுவது போல், பெரியாரை அடக்குவதற்காக நீங்கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவுசெய்து தெரிந்துகொள்ள வேண்டுமென்று நான் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். எந்த சர்க்காரும் தனிப்பட்டவர்களின் கிளர்ச்சியை ஒடுக்குவது என்பது இயற்கையாகவே
16