உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

யாளாது, தேசீயக் கொடியின் மாண்புகளையும், அரசியல் சட்டத்தின் மாண்புகளையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி அதன் மூலம் அவைகளுக்கு கெளரவம் தேடுங்கள் என்று சொல்லிக் கோண்டு நமது அரசியல் சட்டம் வேதத்திற்கும் சிறந்த வேதம் என்று போலீஸ் அமைச்சர் கூறுகிறார். வேதம் படும்பாட்டை உலகம் இன்று பார்க்கிறது—வேதத்திற்கும் சிறந்த வேதம் என்று சொல்வதால் அதற்கு முக்கியத்துவம் கற்பித்துக் கொடுத்துவிட முடியாது. அரசியல் சட்டம் என்றால், அது என் வாழ்விற்காக இருக்கிறது, அது என்னை மனிதனாக ஆக்குகிறது, என்னை நல்லவனாக இருக்கச் செய்கிறது. எனக்கு நாட்டில் மதிப்பளிக்கிறது என்று நாட்டில் உள்ள மக்களை உணரச் செய்தால், அதை யாருமே தீண்ட மாட்டார்கள். நான் கேள்விப்படுகிறேன், நேரு அடுத்த திங்கள் இந்த மாகாணத்திற்கு வருகிறபோது, அவர்கள் ஏதோ ஒரு பிரச்சனையில் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை என்று அதிருப்திப்பட்டவர்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதாக இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள், மதுரையிலும், கொடைக்கானலிலும் நின்று கொண்டு நேருவே திரும்பிப்போ. நேருவே திரும்பிப்போ என்று சொன்னால் அதில் தேசீய கெளரவம் பங்கப்படவில்லையா? ஜப்பானில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படுகிறது, அமெரிக்காவில் கோலாகல விழாவில் அவர் கலந்து கொள்ளும்போது மதுரையில் கருப்பு கொடி பிடிக்கிறார்கள் என்றால் அது அவருக்கும் தேசீய கௌரவத்திற்கும் இழுக்குத்தான். அப்பொழுது அதையும் தடுக்கவேண்டும். கருப்பு கொடி காட்டுவதையும் தடுக்க வேண்டும். இப்படி யெல்லாம் சட்டம் கொண்டு வந்தால் இந்த ஐந்து வருடத்திற்குள் எதிர்க்கட்சியில் இருப்பதே கூடாது என்று சொல்லி, சில நாடுகளில் ஒரு கட்சிதான் இருக்கலாம், அதற்குப் பெயரும் ஜனநாயகம்தான், என்பதுபோல் நீங்களும் ஒரு கட்சி ஜனநாயகத்தை உண்டாக்க விரும்புகிறீர்கள். நீங்கள் ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரப் பாதையில் போகிறீர்கள். அதற்கு வேண்டிய, அதற்கு உதவக்கூடிய காரியங்களைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். அப்படி நான் சொல்லும்போது, கொளுத்துகிற காரியத்தில் நான் பங்கு ஏற்றுக் கொள்கிறவன் அல்ல, நாங்கள் அந்த முறைகளை ஏற்றுக்கொள்பவர்கள் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொள்வதோடு, தயவு செய்து அருள்கூர்ந்து ஜனநாயக தத்துவத்தை மனதில் வைத்துக்கொண்டு, விஷயம்