உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

ளிடத்திலே அதிக செல்வாக்கைப் படைத்த ஒரு தலைவர் பெரியார் என்பதை இவர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்று கருதுகிறேன். அவர் திடீரென்று ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து நேற்று காலை நம் ராஜ்யத்திற்கு வந்தவரல்ல. லண்டன் நாட்டவர் போகும்போது நம்மிடத்திலே விட்டுவிட்டுச் சென்றுவிட்ட விசித்திர பிறவியுமல்ல. நெடுங்காலத்திற்கு முன்னாலிருந்தே இந்த நாட்டுக்கு இடைவிடாமல் உழைத்து வருபவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும்; தலைவராகவும் இருந்து பணியாற்றியவர். காங்கிரஸ் மூலமாக சில கொள்கைகள் நிறைவேறாது என்ற காரணத்தினால் அதை விட்டு வெளியேறியவர். இருந்தாலும் இன்றைய நிலையில் காங்கிரஸ்தான் பதவியிலிருக்கவேண்டும் என்பதற்காக பொதுத் தேர்தலின்போது உங்களுக்காக இடைவிடாமல் உழைத்தவர். தகப்பனிடத்தில் பிள்ளை போவது—எத்தனை மனஸ்தாபமாக இருந்தாலும் அதுதான் சரியென்பதுபோல காமராஜருக்கு பெரியாரிடத்தில் காதல் இல்லையென்றாலும் கூட பெரியார் தங்களுடைய மாஜி தலைவர்—மாஜி தோழர் என்கிற முறையிலாவது அவரை அணுகுவது சரியான கொள்கைதான் என்று நான் கருதுகிறேன். தன்னுடைய மாஜி தலைவர், மாஜி தோழர் இவரைப்பற்றி சபையில் யாராவது ஏதாவது சொன்னால் மனம் புண்படுமே என்பதுபோலத்தான் இன்றைக்கு சபையில் காமராஜர் இல்லையென்று கருதுகிறேன். கனம் நிதி அமைச்சர் என்னைப்பற்றி சொன்னதுபோல் அவர் ஓடிவிட்டாரென்று சொல்லமாட்டேன். நாகரீகமான பாஷையில் ஒளிந்துகொண்டார் என்று கருதலாம். தான் இவ்விடத்திலிருந்து துக்கப்படாமல் வேறு இடத்திலிருந்து மனதிற்கு சாந்தி ஏற்படுத்திக் கொள்கிறார் என்று கருதுகிறேன்.

ஆனாலும் போலீஸ் அமைச்சர் அவர்கள் பேசும்போது "காமராஜர் போய் சந்திப்பதைக் காட்டிலும் நீங்களே போய் சந்திக்கலாமே. தந்தையும் மகனும் பிரிந்திருந்தாலும் இந்தக் காரணத்தினால் சந்திப்பது மிகவும் பொருத்தமாயிற்றே" என்று குறிப்பிட்டார்கள். பிரிந்துவிட்டதனால் இழந்துவிட்ட லாபத்தை திரும்பவும் சந்தித்து ஒட்டிக்கொள்வதின் மூலம் பெற்றுவிடலாமென்று சொன்னார்கள். அவர்களுடைய நல்லெண்ணத்தைத் துணைகொண்டு நான் அவரை சந்தித்துப் பார்க்கிறேன். ஆனால் அது வரையில் இந்த சட்டத்தை நிறுத்தி வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அவரைப் போய்

17