134
சந்திப்பது தூது ஆகாது. இந்தக் குற்றத்தைச் செய்தால் இத்தனை வருடம் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை அவரிடத்தில் சென்று சொல்லும் அறிவிப்பாகத்தானிருக்கும். அதைப் போய் நான் சொல்லவேண்டாம். பத்திரிகை வாயிலாக அவரே பார்த்துக் கொள்வார். உண்மையில் நான் அவரைப் போய் இந்தக் காரணமாக சந்திப்பதனால் லாபம் ஏற்படுமென்றால், திரும்பவும் நாங்கள் அவரோடு ஒட்டிக் கொள்ள முடியும் என்றால் மகன் தந்தை செய்ததை மறந்து திரும்பவும் அவரிடத்தில் சென்று ஒட்டிக் கொள்வது குற்றங்களில் ஒன்றல்ல. குணங்களில் ஒன்று என்பதை நிதி அமைச்சரவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அவர் உதாசினப்படுத்தினாலும் நான் சென்று பேசுகிறேன். அதுவரையில் இந்தச் சட்டத்தை நிறுத்தி வையுங்கள். சட்டத்தை நிறைவேற்றி விட்டு நான் போய் பேசினால் அவர் என்ன சொல்வார் என்பது எனக்குத் தெரியும். "எனக்கு எண்பது வயதாகிவிட்டது. மூன்று வருடம் சிறையில் கிடந்தால் என்ன? எனக்காக யாரும் துக்கப்பட வேண்டாம்" எனத்தான் சொல்வார் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் இந்த நேரத்திலும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். "இப்போது வேண்டியது சந்திப்பு. சந்திப்பு தேவையே தவிர சட்டம் தேவை இல்லை"—என்று கடைசியாகவும் வலியுறுத்திக்கொண்டு முடித்துக் கொள்கிறேன்.
🞸🞸🞸🞸
11—3—1958]
[செவ்வாய்க்கிழமை
(ஆட்சி மொழிப் பிரச்னையைப் பற்றி எழுந்த விவாதத்தில் நிகழ்த்திய கருத்துரை....)
முற்பகல் 10-40
சட்ட மன்றத் துணைத்தலைவர் அவர்களே, மொழிப் பிரச்னை சம்பந்தமாக கருத்துரை வழங்குவதில் நல்ல சூடு பிடித்திருக்கிறது என்பதனை எங்களுடைய தரப்பிலிருக்கின்ற கனம் அன்பழகன் அவர்கள் இந்த சட்ட மன்றத்தின் முன்னால் எடுத்துரைத்தார்கள். நான் இந்தப் பிரச்னையைப் பற்றி முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து கவனிக்க விரும்புகிறேன் மொழிப் பிரச்னையில் நாம் இன்றைய தினம் எடுக்கின்ற முடிவுகள் நம்மை மட்டும் கட்டுப்படுத்துமென்று இருக்குமானால் நாம் அவரவர்களுக்கு இருக்கின்ற விருப்பு வெறுப்புகளை முக்கியமாக கருதி ஒரு முடிவினை அவசரப்பட்டு ஆர்வத்தின் காரணமாக