135
எடுத்து விடலாம். ஆனால் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் நம்மை மட்டுமல்லாமல் நம்முடைய பிற்கால சந்ததிகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒரு பெரும் பொறுப்பை ஏற்கின்ற நேரத்தில் எல்லையில் ஆர்வம் நம்மிடத்தில் இருக்கிறது என்பதால் எழுகிற ஆணவமோ, அல்லது எல்லோரைரையும் கட்டுப்படுத்தக் கூடிய எண்ணம் பெற்றிருக்கின்றோம் என்ற அரசியல் உணர்வோ மேலிடுவதை விட்டு விட்டு, நாம் செய்யக்கூடிய காரியம் பிற்கால சந்ததியார்களைப் பாதிக்கக் கூடும் என்ற காரணத்தினால் நாம் மிகுந்த ஜாக்கிரதையோடு இந்தப் பிரச்னையை அணுக வேண்டியிருக்கிறது. ஆதனால் தான் என்று கருதுகிறேன் இந்த ஆட்சிப் பொறுப்பிலிருக்கின்றவர்கள் இந்தப் பிரச்னையில் ஒருகோடியில் சின்னதுரைகளைப் பார்க்கிறார்கள். இன்னொரு கோடியில் அண்ணாதுரைகளைப் பார்க்கிறார்கள் (சிரிப்பு). இரண்டு முனைகளுக்கு மிடையிலிருக்கின்றவர்கள், ஆட்சியாளர்கள், கனம் சின்னத்துரை அவர்கள் சொல்கிறபடி இந்தி மக்களுடைய மொழி என்று ஏற்றுக்கொள்வதில் தயக்கமடைகிறார்கள். அதே நேரத்தில் அண்ணாதுரை சொல்கிறபடி "ஆங்கிலம் இருக்கட்டும், ஹிந்தி தேவையில்லை" என்பதை ஏற்றுக்கொள்வதற்கும் தயக்கமடைகிறார்கள். இந்த இரண்டுக்கும் இடையிலே எதாவது ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க முயலுகிறார்கள். இந்த நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன் வரவேற்கிறேன். இந்த நல்லெண்ணத்தை இந்திய துணைக் கண்டத்தில் வேறு எந்த ராஜ்யத்திலும் நாம் பார்க்கவில்லை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன். அப்படிப் பெருமையுடன் சொல்லக் கூடிய நேரத்தில், இந்த பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க நல்லவழி கண்டுபிடிக்க வேண்டுமென்று நல்ல முயற்சி எடுத்துக்கொண்டார்கள். அந்த முயற்சியில் எல்லா கட்சிகளிலும் உள்ளவர்கள் தத்தமது கருத்துகளை எடுத்துச் சொல்லவேண்டுமென்று மெத்த பரிவோடு விரும்பினார்கள். அவரவர்கள் தத்தமது கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள். ஆனால் இதற்கிடையிலே நாட்டிலே முளைத்துவிட்ட சில பிரச்னைகள் ஒவ்வொருவரும் தத்தமது கருத்தை, நாட்டுக்கு விளக்கி கூற வேண்டிய நிர்ப்பந்தத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர் கட்சித் தலைவர் வி. கே. ராமசாமி முதலியார் அவர்கள் "மொழிக் கமிட்டியில் உட்கார்ந்து விட்டு, மற்றொரு கூட்டத்திற்குச் சென்று, இரண்டுக்குமிடையே இருக்கின்ற கருத்தைப் பற்றி வேறு விதமாகச் சொல்லக்கூடும், அதிலும் குறிப்பாக என்னைப் போன்றவர்கள் சொல்லக்கூடும்"