138
கையைவிட மாறுபட்ட கருத்தைக் கொண்ட ஒருவர் துணைவியாக இருப்பது தவறல்ல. இதை முதலில் பேசியவர்கள் உணர்ந்திருந்தால் இதைக் குறித்து பேச்சு வந்திருக்காது. ஆனால் விஷயங்களைப் புரிந்து கொள்ளும் துணைவியாக இருந்தால் நல்லது. நான் குறிப்பிட விரும்பியது என்னவென்றால், அந்தப் பிரச்னையை அணுகுகின்ற நேரத்திலே, "அரண்மனை முதல் அந்தப்புரம் வரை" நுழைந்து பார்க்கிற அளவிற்கு விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதுதான். இன்றைய தினம் கிளம்பியிருக்கிற முக்கியமான கட்டம், சென்னை மாநில சர்க்கார் தயாரித்திருக்கிற அறிக்கையைப் பற்றியதாகும். "ஜெனரல் எக்ரிமென்ட்", அதாவது பொது உடன்பாடு வேண்டுமென்ற காரணத்தால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நான் அந்தக் கமிட்டியிலே கலந்துகொண்டு, அந்த அறிக்கைக்கு ஒப்பமும் அளித்திருக்கிறேன். ஆனால், அது தவறான முறையில், வியாக்கியானம் செய்யப்பட்டும், தப்பான முறையிலே பயன்படுத்தப்பட்டும் வருவதைப் பார்த்து, என்னுடைய கொள்கையையும், கழகத்துனுடைய கொள்கையையும் விளக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கழகத்தின் சார்பிலே தரப்பட்டுள்ள திருத்தல்கள், இந்த அறிக்கையை வலியுறுத்துவதற்காகவேயன்றி, வலுவற்றதாக ஆக்குவதற்கல்ல.
சாதாரணமாக ஒரு பிரச்னையை மூன்று வழிகளில் தீர்க்கலாம். இருக்கின்ற முக்கியமான அடிப்படை உண்மைகளை மறந்துவிட்டு, மேலெழுந்தவாரியாக சமரசத்தை ஏற்படுத்தலாம். இன்னொரு சமரசத்துக்காக அடிப்படை உண்மைகளை மாற்றிக்கொள்ளலாம். மேலும் பிரச்னையில் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல்கூட சமரசத்திற்கு வரலாம். சமரசம் என்பது முக்கியமானதாக கருதப்படாமல், இந்த நாட்டிலே இருக்கின்ற மக்களின் எண்ணம் மத்திய சர்க்காருக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த நாட்டிலே இருக்கின்ற மக்களின் கருத்து ஐயம்திரிபுற மத்திய சர்க்காருக்கு அறிவிக்கப்பட வேண்டும். இந்த நாட்டிலே இந்த விஷயத்தில் எல்லோரு ஒருமித்த கருத்தினைக் கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிற 1965-ல் வரயிருக்கிற ஆபத்திலிருந்து, விபத்திலிருந்து, இந்த நாடு காப்பாற்றப்பட ஆங்கிலம் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்திருக்க வேண்டுமென்று இந்த நாட்டிலே ஒருமித்த கருத்து இருக்கிறது. மற்ற விவகாரங்களிலே ஒருமித்த கருத்து இல்லை என்பது மட்டுமல்ல, ஒருமித்த கருத்து இருப்பது