141
யாக ஆராய்ந்து பார்த்தால், இந்திய அரசியல் சட்டத்தை திருத்தம் செய்வதற்கு ஒரு "Political climate" அரசியல் சூழ்நிலை சரியானபடி ஏற்பட்டிருக்கிறதென்று நான் கருதுகிறேன். நீடித்து இருக்க வேண்டுமென்கிற கருத்தை நான் வலியுறுத்துகிறேன். இதை அறிக்கையில் சேர்க்கவேண்டுமென்று எங்கள் கழகத்தின் சார்பில் நாங்கள் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறோம். திருத்தம் தருகிறோம் என்கிறபோது, மொத்தத்தில் திருப்தி ஏற்பட்டுத்தான் தருகிறோம் என்பதைக் கனம் நிதி அமைச்சர் அவர்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.
"தலையைச் சீவிக்கொண்டு வா" என்று சொல்லும் நேரத்தில், கவர்ச்சியாக உள்ள மங்கையைப் பார்த்துதான் சொல்லுவோமே தவிர கவர்ச்சியற்றவர்களை அல்ல, இவர்கள் தலை சீவாவிட்டால் தான் என்ன என்று சொல்லி விடக்கூடும். இந்த அறிக்கையிலே உயிரோட்டம் இருக்கவேண்டுமானால், நாங்கள் சொல்லுகின்ற திருத்தத்தை சேர்த்துக்கொண்டால்தான் உயிரோட்டம் பெற முடியும், இதில் ஏதோ ஒரு வகையான சமரசத்திற்கு முயற்சி செய்தோமானால் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக இருக்குமே ஒழிய இந்த அறிக்கை வலுவிழந்ததாகப் போய்விடும் என்று அஞ்சுகிறேன். ஆகையினால், சென்னை சர்க்கார் கருத்து வெற்றி பெற வேண்டுமானால், இந்திய அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்திக்கூற ஆசைப்படுகிறேன். அதைத் திருத்துவதற்கு ஏற்ற ஒரு நல்ல சூழ்நிலை இன்றைய தினம் உருவாகிக்கொண்டு வருகிறது. பலருடைய முயற்சியும் இருக்கிறது. அவர்களைப்பற்றி இந்த மாமன்றத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டது. அதைப்பற்றி நான் பேசப்போவது இல்லை. எங்களுக்கு தரப்பட்ட அறிவுரைகளைப் பற்றி மட்டும் இரண்டொரு வார்த்தைகளை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் 'ராஜாஜி ஒரு புளிய மரம், அதன் நிழலில் எதுவும் வளராது" என்று சொன்னார்கள். அதே புளிய மரத்தின் நிழலில்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். ஆகையால் நாங்கள் மட்டும் வளர மாட்டோம் என்று சொல்வதில் பொருள் இல்லை. எப்படி இருந்தாலும், புளியமரம், நட்டாற்றில் விட்டு விடுவார்கள்" என்றெல்லாம் இந்தப் பிரச்னையின்போது எடுத்துச் சொன்னார்கள். அவருடைய நேர்மையை ஆராய்வது அவ்வளவு சரியல்ல என்று நான் கருதுகிறேன், அது
18