45
செலவின் பெரும் பகுதி, இரும்பு, எஃகு போன்ற அடிப்படைத் தொழில்கள் அபிவிருத்திக்காகவும், அந்த வளர்ச்சிக்கு ஏற்றாற் போல அதை ஒட்டிப் போக்குவரத்து சாதனங்களில் முன்னேற்றம் காணவும் பயன்படும். பொதுத்துறையில், இந்த சனங்களுக்காகச் சுமார் 2.000 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பெருந் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதி எதுவும் தென்னிந்தியாவில் செலவு செய்யப்படுவதாகத் தோன்றவில்லை, நம்மிடம் நிலக்கரி சில்லையென்பது உண்மைதான். ஆனால், தெற்குப் பிராந்தியத் தொழில் வளர்ச்சிக்காகத் தேசத்தின் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முயற்சி எதுவுமில்லை என்ற உண்மை மாறிவிடாது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டத்துக்காக சுமார் 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 50 கோடி ரூபாயும் கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட தெற்கு ராஜ்யங்களுக்காகச் செலவாகும் தொகை விகிதம் அவ்வளவாக உயராது. மேலும் நெய்வேலித் திட்டம் பரீட்சார்த்த நிலையில் இன்னும் உள்ளது. முக்கிய இயந்திரத் தொழில்களை நிறுவுவதற்கு ஏற்ற இடங்கள் தென்பிராந்தியத்தில் நிறைய இருக்கின்றன. அத்தொழில்களுக்காக இடத்தைத் தேர்ந்தெடுக்கும் போதாகிலும், இந்தப் பிரதேசத்துக்குச் சற்று சலுகை காட்டுவது மிகவும் அவசியமாகும். நிலத்தை நம்பி வாழும் மக்கள் தொகையையும், சாகுபடியாகும் ஏக்கரா அளவையும் எடுத்துப் பார்த்தால், இந்தப் பிரதேசத்தில் இருக்கும் ஜனநெருக்கடிபோல், நாட்டில் வேறெங்கும் கிடையாது. கன மின்சார இயந்திரத் தொழிற்சாலை நிறுவ உத்தேசம் உள்ளது. அதற்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் நாம் செய்து தரமுடியும். சேலத்தில் "பாக்ஸைட்" கனிகளிலிருந்து அலுமினியம் உற்பத்தி செய்ய, நம் மின்சார இணைப்பில், போதிய மின்சாரம் உள்ளது. புதிதாக உற்பத்தியாகவிருக்கும் எஃகிலிருந்து கன இயந்திரங்கள் செய்ய ஒரு தொழிற்சாலை இங்கு நிறுவுவதற்கும் இடமிருக்கின்றது. இப்பிரச்னைகள் குறித்து, நம் கருத்தை, நாம் வற்புறுத்தியுள்ளோம். இச்சபையும் என்னுடன் சேர்ந்து இக் கருத்தை மேலும் வன்மையாக ஆதரிப்பதின்மூலம் நம் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ள இந்த அம்சங்களைத் திட்டக் கமிஷனும் இந்திய அரசாங்கமும் உரிய முறையில் கவனிக்கும்படி செய்யமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு,"
6