உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கேட்டுக்கொள்கிறேன். நாம் செலவு செய்வதில் மாத்திரமல்ல, அதன்மூலம் கிடைக்கிற பலன் என்ன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். உண்ட சோறு ஜீரணமானால்தான் வலுவு பெறமுடியும். ஆகவே ஏதோ 6 கோடி ரூபாய் செலவு செய்கிறோம் என்று மாத்திரம் பெருமைப்பட்டு கொள்ளலாமே தவிர இதனால் எந்தவிதமான பலன் ஏற்படுகிறது. இதிலிருந்து எத்தனை சதவிகிதம் மேற்படிப்புக்கு பயன்படுகின்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இன்றைக்கு அதிகமாக ஏற்பட்டிருக்கிற பொருளாதார கஷ்டத்தினாலும் வாழ்க்கைத் தரத்தினாலும் மேல்படிப்புக்கு அதிக சதவிகிதம்பேர்கள் போகமுடியாமல் இருக்கின்ற நிலைமையில், இந்த ஆரம்பக் கல்வி எந்த அளவு சமுதாயத்திற்கும் நாட்டுக்கும் பயன்படும் என்பதை சொல்ல வேண்டுமென்றால் நாம் அறிந்தவரையில், அடக்கமாகவே சொல்லிக்கொள்கிறேன், இதுபற்றிய புள்ளிவிவர இலாகா எதிர்க்கட்சியில் இல்லாத காரணத்தால், சரியாகக் கூறமுடியா விட்டாலும் ஓரளவு கூறமுடியும், தங்களது பொருளாதார நிலையின் காரணமாக மேல்படிப்புக்குப் போக முடியாமல் ஏதோ கொஞ்சம் படித்ததையும் மறந்துவிட்டு, ஏதோ இரண்டு மூன்று ஆண்டுகள் படித்துவிட்டு கார்டு, கவர் வந்தால் எடுத்துக்கூட்டி படிக்கிற அளவுக்குத்தான் அதிகம்பேர் இருக்கின்றனர் என்பதை எனக்கு சொல்லமுடியும். அடுத்ததாக சொல்வேன், கல்வித்துறையில் இன்று நாளுக்குநாள் பற்பல பரீட்சைகள் அனாவசியமாக என்று கூட சொல்வேன், பல்வேறு பரீட்சைகள் வைக்கப்படுகிறது. இவ்விதமான பரீட்சைகள் நாம் வரவேற்கத்தகுந்த நிலையில் இல்லை. மனிதனுடைய வாழ்நாள் பூராவுக்கும் அவர்கள் ஒரே அடிப்படையில் இருக்க வேண்டும் என்று விரும்பினாலும் அவ்விதம் இருக்க முடியாது என்பதை நாம் கண்டு வருகிறோம். இப்போதுள்ள முறையில் மாற்றம் காணவேண்டும் என்றுள்ள கருத்து சர்க்காருக்கு இருப்பதாக காணவில்லை. நம்முடைய நிதி அமைச்சர் அவர்கள் இதைப் பற்றி குறிப்பிடுகிற நேரத்தில் கண்டிப்பாக சொன்னார்கள். இந்த சர்க்காருடைய கொள்கை ஆதாரக் கல்விதான் என்று சொன்னார்கள். அதைப்பற்றி அவர்கள் கண்டிப்பாக சொல்வதற்குக் காரணம், ஆதார கல்வியைப்பற்றி நீங்கள் ஆயிரம் குற்றங்கள் சொல்லலாம். அதற்காக எல்லாம் நாங்கள் இந்தக் கொள்கையை மாற்ற தயாராயில்லை என்றுதான் அவர்கள் கூறினதை நமக்கு எடுத்துக்கொள்ள முடியும். நாங்கள் அமைச்சர் அவர்களிடம் சொல்லி அதை மாற்றாவிட்டாலும்கூட பிளானிங் கமிஷன்