உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

மெம்பர் டாக்டர் கோஷ் அவர்கள் இரண்டொரு நாட்களுக்கு முன்னால் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், நாங்கள் சாமான்யமானவர்கள் என்பதற்காக நீங்கள் நாங்கள் சொல்வதை கேட்காவிட்டாலும் பிளானிங் கமிஷன் மெம்பர் சொல்லியிருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள் என்ற காரணத்தால் அதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்,

Perhaps the time has come when we may forget the artifical difference between the basic and non-basic type of schools. What we want are, better type of schools and better type of teachers. This is because in some States, there is a feeling that basic schools are creating a caste of pupils who are meant to live for ever in rural areas." இதை விட தெளிவாக உண்மை நிலைமை யாரும் எடுத்துக்காட்ட முடியாது, மேலும் இந்த ஆதாரக் கல்வியைப்பற்றி பொறுப்புள்ள தலைவர்களில் ஒருவர் சொல்லியிருப்பது என் நினைவுக்கு வருகிறது. இந்த ஆதாரக் கல்வியின் திட்டவட்டமான கொள்கை என்ன என்பது அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஆகையினால் ஆதாரக் கல்வியை நாம் கையாளுவதற்கு முன்னால் இன்று இந்த சர்க்கார் மத்திய சர்க்காருடைய கொள்கையில் கீழ் இருந்தாலும்கூட ஆதாரக் கல்வி சம்பந்தமாக இந்தச் சர்க்காருடைய கொள்கை என்ன, கல்வித்துறையின் அடிப்படையான கொள்கை என்ன என்பதை வகுத்தால் நல்லது என்று கருதுகிறேன். கல்வித்துறையில் மாற்றம் காணவேண்டும் என்று சின்னதுரை அவர்கள் சோஷலிஸ பாணியில் கல்வி இருக்கவேண்டும் என்று எடுத்துச் சொன்னதை கட்சிக்குரியதாக எடுத்துக் கொண்டாலும் கவலையில்லை. உண்மையில் சமுதாயத்தின் நன்மைக்காக அப்படி இருக்கவேண்டும் என்றும் அதற்குரிய விதத்தில் கல்வித்திட்டம் அமையவேண்டும் என்பதையும் நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன், உண்மையில் ஆதாரக் கல்வி கொள்கையை எடுத்துப்பார்த்தால் கிராம சுய ராஜ்யம்தான் புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதை குறிப்பிடுகிற நேரத்தில் இன்றைக்குப் புதிய நவீன முறைகளுக்கும், விஞ்ஞான முறைகளுக்கும் செலவு செய்யப்படுகிற கோடிக்கணக்கான பணங்கள் எல்லாம் விரயம் என்றுதான் கருதவேண்டியிருக்கிறது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் கனரகத்தொழில்களுக்காகவும்,