52
நவீன விஞ்ஞான தொழில்களுக்காகவும் ஏராளமான பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாரத நாட்டு பிரதமர்கூட அணுசக்தி குறித்து, அவை எவ்விதத்தில் பயன்படுத்தலாம் என்பதில் அக்கறை காட்டிக்கொண்டு இருக்கிறார். தனது வெளிநாட்டு பிரயாணத்தின்போது எல்லாம் நவீன விஞ்ஞான முறைகளையும் எவ்விதம் கொண்டு வரவேண்டும் என்பதைப்பற்றி எல்லாம் அடிக்கடி அறிக்கை மூலமாகவும் சொற்பொழிவு மூலமாகவும் தன்னுடைய கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு புறத்தில் நவீன விஞ்ஞான முறைகள் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தப்படுகிற அதே நேரத்தில் மற்றொருபுறம் கிராம சுயராஜ்யத்திற்கு மட்டும் வழிவகுக்கக்கூடிய ஆதாரக் கல்வியை கொண்டு வருகிறோம் என்று சொன்னால் நம்மை இவர்கள் எங்கே அழைத்து செல்கிறார்கள் என்பதை கண்டு நானும் திகைக்கிறேன், நாடும் திகைக்கிறது. எவ்விதமிருந்தாலும் இதைக் கொண்டு வந்தவர்களுக்கு இதைப்பற்றித்தெளிவான காரணம் இருக்கவேண்டும், அதை நிதி அமைச்சர் அவர்கள் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
அடுத்தபடியாக ஓராசிரியர் பள்ளிகளைப்பற்றி நிதி அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், அவர்கள் சொன்ன கருத்துக்களைப் பற்றி நான் கொண்டிருக்கின்ற எண்ணம் தவறாக இருக்குமானால் அதிலுள்ள உண்மைகளை எடுத்துச் சொல்லி என்னை திருத்தவேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. மேற்படி பயிற்சிபெறாத ஆசிரியர்களைக் குறித்து முன்பு சட்டசபையில் சொன்னதிலிருந்து முதலில் அவர்களுக்கு 4 வார பயிற்சி கொடுத்து அவர்கள் ஆசிரியர் தொழிலில் 3 வருஷம் அனுபவம் பெற்றவுடன் குறுகிய கால பயிற்சி அளித்து நிர்ணயிக்கப்படுவர் என்று கல்வி அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மேற்படி கொள்கையை அறிவித்தார் என்று ஓராசிரியர் கழகம் ஒன்று எனக்கு எழுதியிருக்கிறது. சுப்பிரமணியம் அவர்கள் இந்தக் கொள்கை விளக்கத்தை அளித்த போது அதிர்ஷ்டவசமாகவோ அல்லது துரதிர்ஷ்டவசமாகவோ நான் இங்கு இல்லாத காரணத்தால் இதற்கு ஒரு விளக்கத்தை அவர்கள் அளிக்க வேண்டுமென்றுதான் இதைக் குறிப்பிட்டேன். அடுத்தபடியாக, "ப்ரீவொக்கேஷனல் டீச்சர்ஸ்"க்கு முதலில் 39 ரூபாய் சம்பளமும் படியும் என்று அறிவிக்கப்பட்டு கடை சியாக அவர்களுக்கு;