53
"The pay of part time pre vocational teachers in Board Higher Elementary Schools is fixed at rupees ten only with effect from 12th June 1957."
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தொழிற் கல்வி வளர வேண்டும் என்பதைப் பற்றி யாருக்கும் கருத்து வேற்றுமை இல்லாதிருக்கிற இந்த நாளில் தொழில் கல்வியை சாதாரணமாக பள்ளிக்கூடங்களில் கற்றுத் தருகிற ஆசிரியர்களுக்கு 10 ரூபாய் மாதச் சம்பளம் என்று கூறப்பட்டிருப்பது உண்மையிலே சர்க்காரின் கண்ணியத்திற்கும் நாட்டின் நிலைமைக்கும், கல்விக்கு நாம் அளிக்கும் அக்கரைக்கும் உகந்ததல்ல. அடுத்தபடியாக கல்லூரிகளிலும் தமிழை போதனா மொழியாக ஆக்க வேண்டுமென்று கனம் கல்வி அமைச்சரவர்கள் சொன்னதை நான் வரவேற்கிறேன். உண்மையிலே, இந்தத் தலைமுறையில் ஆங்கிலம் படித்தவர்கள்தான் அறிவாளிகள் என்ற மூடப்பழக்கத்தையும் ஆங்கிலத்திலேதான் அறிவைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றிருக்கிற வைதீகத்தையும் போக்கிட, தமிழ்மொழி மூலம் எல்லாத்துறைகளிலும் பயிற்சி பெற முடியும், எல்லாத் துறைகளிலும் நன்கு நிர்வாகம் நடத்தமுடியுமென்று எடுத்துக்காட்டும் பொறுப்பு நமது சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கிறது அந்தக் காரியத்தை சாதிக்கும் வாய்ப்பு நமது கனம் கல்வி அமைச்சர் அவர்களுக்கு இருக்கிறது. அத்துறையில் கனம் கல்வி அவர்கள் எடுத்துச் சொல்கிற எல்லா முயற்சிகளுக்கும் நானும் என் கட்சியும் அவருக்கு துணையாக நிற்போம் என்று இங்கு நான் எடுத்துக் கூற விரும்புகிறேன். அதோடு, கல்வித்துறையின் அடிப்படைக் கொள்கையை சரியான முறையில் வகுத்துக் கொண்டு அதற்கேற்றபடி அதற்கு அதிகம் நிதி தேவை என்று இருக்குமானால் அதற்காக கனம் நிதிமந்திரியவர்கள் கூடுதல்வரிபோட நிச்சயமாக தயங்கவேண்டாம். ஆனால் போடுகிற வரி யார் பேரில் இருக்க வேண்டும் என்பதும் அது எப்படி எப்படி வசூலிக்கப்படவேண்டும் என்பதும் அதன் பலன் யார் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பவைகளைத்தான் நாங்கள் முக்கியமாக கருதுகிறோமே தவிர அதிகமாக செலவு செய்யவேண்டாம் என்றோ அல்லது வரி போடாமலேயே ஆட்சி நடத்தலாம் என்றோ நாங்கள் சொல்லவில்லை. அதற்கு, இந்த சர்க்காரிடம் ஒரு அலாவுதீன் தீபம் இல்லை என்பதை நாங்கள் உணருகிறோம். ஆகவே பெற வேண்டிய இடங்களில் பெறுங்கள் தர வேண்டிய இடங்களில் தாருங்கள் என்றுதான் நாங்கள் சொல்லுகிறோம், என்று சொல்லிக்கொண்டு
7