உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

இந்தக் கோரிக்கையின் மேலுள்ள வெட்டுப்பிரேரணையில் நான் கலந்து கொண்டதின் முக்கியமான நோக்கம் இதிலுள்ள குறைபாடுகளை நீக்கவேண்டும். என்பதே. ஆனால் இதுவரையிலும் எதிர்க்கட்சியிலிருந்து வந்த எந்த யோசனையையும், எந்த பணிவான வேண்டுகோளையும் கவனித்து சர்க்கார் தரப்பிலிருந்து அவைகளை நீக்கவோ அல்லது திருத்திக்கொள்ளவோ செய்யவில்லை என்றிருந்தாலும் நாங்கள் பொறுமை இழந்துவிடப் போவதில்லை. ஒவ்வொரு நேரத்திலும் சொல்கிறோம், சொல்லிக்கொண்டுதான் இருப்போம். நாங்கள் சொல்கிற சிலபல நல்ல கருத்துக்களை சர்க்கார் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று எங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கு இத்துறையில் கூடுதல் ஊக்கம் பிறக்கும் என்று தெரிவித்துக்கொண்டு இந்த வெட்டு பிரேரணையை ஆதரிக்கிறேன்.

🞸⁠🞸⁠🞸⁠🞸

20—7—1957]

[சனிக்கிழமை

[ஹரிஜன முன்னேற்றத்திற்கான மானிய கோரிக்கையைப் பற்றி எழுந்த விவாதத்தில்..... ]

கனம் சட்டமன்றத் துணைத்தலைவர் அவர்களே, ஹரிஜன முன்னேற்றத்திற்காகக் கோரப்பட்டிருக்கிற மான்யத்திற்குப் பிரரேபிக்கப்பட்டுள்ள ஒரு வெட்டுப் பிரேரணையை நான் ஆதரித்துப் பேச முன்வந்திருக்கிற காரணத்தால் இதுவரையில் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டிருக்கிற நல்ல முயற்சிக்கு இடையூறு, உற்சாகத்திற்கு குறைவு ஏற்பட்டு விடக்கூடாதென்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இரண்டாவதாக இந்த நல்ல ஹரிஜன முன்னேற்றத்தை நடத்துவதற்கு இப்போதுள்ள அமைச்சரைவிடத் தகுதியானவர்கள் அந்தக் கட்சியிலேயே வேறு ஒருவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையின் பேரிலோ அல்லது எங்கள் கட்சியிலே உடனடியாக ஆட்சியை எடுத்து நடத்தக்கூடியவர் இருக்கிறார் என்கிற நம்பிக்கையின் பேரிலோ அதிலுள்ள குற்றங்குறைகளை எடுத்துச்சொல்ல நான் முன்வரவில்லை.

ஹரிஜன முன்னேற்றம் என்பது தேசீயப் பிரச்னை என்கிற விஷயத்தை—ஹரிஜனங்கள் என்கிற தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட பெருங்குடி மக்கள் யாரால் தாழ்த்தப்பட்டார்கள்,