உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

சார்ந்தவர்கள்—நல்ல ஆர்வம் உடைய இளைஞர்கள், உரிமைக் குரலை எழுப்பக்கூடியவர்கள், உள்ளுணர்ச்சி நிறைந்தவர்கள்—ஏராளமாக இருப்பதும் தங்கள் சமூக உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ள அவ்வப்போது விழிப்போடு செயலாற்றுவதும் நாம் செலவழிக்கும் ஒரு கோடி, நாட்டுக்கு அளிப்பதைவிட அதிகமாக நல்லபலன் அளித்திருக்கிறதென்றே நான் கருதுகிறேன்.

பொதுத் தொகுதி முறையில் சமுதாயத்தில் மக்கள் ஆற்றலும் அறிவும் படைத்து ஏராளமாக மீண்டும் மீண்டும் இங்கு வர வேண்டுமானால் அவர்களின் வாழ்க்கைத் தரம் நன்றாக உயர்த்தப் படவேண்டும். இந்த தலைமுறைதான் கடைசி ஹரிஜன தலைமுறை. ஹரிஜனம் பிற ஜனம் என்று இருக்கிற சமுதாய அமைப்பை இந்தத் தலைமுறையோடு கட்டி விடுவதற்கு ஏதாவது ஒரு தீவிரமான ஒரு நடவடிக்கையை உண்மையிலே எடுத்தாலொழிய, உண்மையில் தனித்தொகுதி போய்விட்டால் தனித்தொகுதி கைவிடப்பட்ட பிறகும் இத்தனை மக்கள் பொதுத் தொகுதியிலிருந்து இந்தப்பேரவைக்கு வருவார்களா என்பது ஐயுறுவதற்கு உரியதுதான். இதை எடுத்துச் சொல்ல ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் தங்கள் காலத்திலே செய்யப்பட்ட காரியங்களை எடுத்து விளக்கும் நேரத்தில் பலருக்கு வருத்தமாக இருந்தது, ஆனால் ஒன்று நான் சொல்லி கொள்வேன். இந்த காங்கிரஸ் சர்க்கார்—காங்கிரஸ் ஆட்சி—ஏற்பட்ட பிறகு தான் ஹரிஜனங்களைப்பற்றிக் கவனிக்க ஆரம்பித்தார்கள் என்று எடுத்து சொல்லுவது நம்முடைய மாநிலத்தின் அரசியல் வரலாற்றைக் கூர்ந்து பார்க்காத குறையே என்று உணருகிறேன்,

சர்க்கார் வெளியிட்டிருக்கிற அறிக்கையில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது :—

'Madras is one of the earliest Provinces to take up this question on Government level and as early as 1919 an effort was made to make an exhaustive enquiry into the conditions of the depressed and backward classes and the disabilties of improving their conditions. It was in that year that the Commissioner of Lanour was entrusted by the Government with the duty of the betterment of the condtions of the depressed and backward classes in the State."