59
அக்காலத்தில் வெளிவந்த இலக்கியத்தைப் பார்த்தால் தெரியும். அவர்கள்தான் முதன் முதலில் தாழ்த்தப்பட்டவர்களைத் தொட்டார்கள். அவர்கள் தொட்டுக் கொடுத்த பண்டங்களை உண்டார்கள். அதன் மூலமாக அந்தச் சமூகத்தைப் பிடித்திருந்த கஷ்டம் அந்தக் காலத்தில் நீங்க வழி ஏற்பட்டது. ஓரளவுக்கு மதிப்பு கிடைத்தது அதற்கு பிற்பாடு ஏற்பட்ட வெள்ளைக்கார ஆட்சியில் நான் முன்பு படித்துக் காட்டியபடி 1919—ல் ஏற்பட்ட லேபர் இலாகாவின் மூலம் அவர்களுடைய குறைபாடுகளைப் போக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன அதற்குப் பிற்பாடு ஜஸ்டிஸ் கட்சி காலத்தில் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, சபாநாயகர் மூலமாக இந்தச் சபைக்குத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்- மதுரைமாவட்டத்தில் ஜில்லா போர்டு தலைவராக இருந்த காலஞ்சென்ற எங்கள் பெரும் தலைவர்களில் ஒருவரான சௌந்தரபாண்டியன் அவர்கள் ஆதித்திராவிடரை பஸ்ஸில் ஏற்றக்கூடாது என்ற கொடிய சட்டத்தை நீக்கி, அவர்களை ஏற்றாவிட்டால் மோட்டார்களுக்கு லைசென்ஸ் தரப்படமாட்டாது என்று ஒரு சட்டத்தை வகுத்தார்கள். 'அந்தக் காலம் எப்படிப்பட்டது? அந்தக் காலத்தில் போடப்பட்ட சட்டம் எங்கே? இந்தக் காலத்திலே போடுகிற சட்டம் எங்கே? என்று உங்கள் கவனத்திற்குக் கொண்டுவரச் சொல்லுகிறேனே தவிர நாங்கள் ஒன்றும் புதிதாகப் பெரிதாகச் செய்துவிட்டோம் எனப் பெருமையடித்துக் கொள்ளச் சொல்லவில்லை. ஆயினும் இன்றைக்குச் செய்யக்கூடியது என்னவென்று பார்த்தால், ஒரு கோடி செலவழிக்கிறோம் என்று சொன்னால் ஒரு கோடி செலவழிக்கப்படுகிறது என்று எடுத்துக் காட்டுகிற அங்கத்தினர்கள் அத்தனைபேரும், "செலழிக்கின்ற தொகை எப்படிச் செலவழிக்கப்படுகிறது? யார் யாரால் செலவிடப்படுகிறது? அது எந்தெந்த இடத்திற்குப் போய்ச் சேருகிறது" என்பதைப் பார்த்தால் உண்மையிலேயே அவர்கள் வளர்ச்சியைத் தெரிவித்துக்கொள்ள முடியும்.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு சரித்திர வரலாறு நினைவுக்கு வருகிறது, பேரரசன் Freder c மக்களுக்குத் தேவையான நல்ல காரியங்களைச் செய்துகொண்டு வந்தான். பெருந் தொகையைச் செலவிட்டான். மக்களோ ஏழ்மையிலேயே வாடியிருந்தார்கள். ஒரு பெரும் சபை கூடியிருந்த நேரத்தில் பல பிரபுக்கள் வீற்றிருந்த அந்த அவையிலே "நான் ஏராளமான தொகையை மக்க-