65
ரத்தில் ஈடுபடவேண்டும் இந்தப் பிரசாரத்திற்கு ஹரிஜன தினம் தான் மிகப் பொருத்தமானதா இருக்கும். ஹரிஜன தினத்தில் இதற்கான மனமாற்றத்தை மக்களிடத்திலே ஏற்படுத்த பிரச்சாரம் நல்ல முறையில் நடத்த வேண்டும்.
சாதாரணமாகப் பல விஷயங்களை நாம் கனவு காண்கிறோம். நான் கண்ட அப்படிப்பட்ட ஒரு கனவை சபாநாயகர் மூலமாக இந்தச் சபைக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆண்டவன் எத்தனையோ பெரிய திருவிளையாடல்களைப் புரிந்திருக்கிறான் என்பதை புராணங்களைப் படித்து அறிந்து கொள்ளலாம். பல திருவிளையாடல்களைப் புரிந்த ஆண்டவன் இந்த நூற்றாண்டிலே ஒரு புதிய திருவிளையாடலைப் புரிய மாட்டானா? ஒரு நாள் இரவு தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்திலே, நம் வீட்டிலிருந்து 4, 5 பேர்கள் அவர்கள் வீட்டிற்கும். அவர்கள் வீட்டிலிருக்கும் 4, 5 பேர்கள் நம்முடைய வீட்டிற்கும் வந்து விட்டால், விடிந்து பார்க்கும்பொழுது இரண்டு பேர்களும் ஒன்றாக சேர்ந்து கலந்துவிட்ட திருவிளையாடலை ஆண்டவன் புரிய, அதைக் காண்பவனில் நான் முதல்வனாக இருக்கமாட்டேனா....... என்று கனவு காண்பதுண்டு ஆனால் அந்த ஆண்டவன் தம்முடைய திருவிளையாடல்களை பத்தோடு நிறுத்திக்கொண்டு விட்டான். மனிதர்கள்தான் அதைப்போல் இப்பொழுது செய்ய வேண்டும் இப்படிச் செய்வதற்கு இந்த மந்திரி சபையை விட திறமையான மந்திரி சபை காங்கிரஸ் கட்சியிலே இல்லை என்று சொல்லிக் கொள்ள பெருமைப்படுகிறேன்.
அமைச்சர் அவர்கள் அன்றொரு நாள் ஹரிஜன மக்களின் நிலைமையை எடுத்துக் கூறியபோது "இப்பொழுதுதான் என் தங்கைகளின் கழுத்தில் வெள்ளியையும். தங்கத்தையும் பார்க்கிறேன்" என்று உணர்ச்சி ததும்பச் சொன்னது இன்றும் என்னுடைய செவியிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே இந்தப் பிரச்னையை நன்றாக அறிந்தவர்—பெரிய தலைவர் —என்றும் பெருமைப்பட்டு, அந்தச் சமுதாயத்தை ஒடுக்கும் வேறு எந்தச் சமுதாயத்தையும் கண்டிப்பதற்கு பூரண உரிமை உடையவர் இன்றைக்கு அந்த இலாகா பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து இந்த நேரத்தில் நான் சொல்லுவேன். நீங்கள் எங்களை விரும்பி ஆதரித்தாலும் சரி. ஆதரிக்காவிட்டாலும், ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மதிப்பளித்-