உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மாக பேசப்பட்டது. பட்டைக் கொண்டு பாவையர்களுடைய மனத்தை திருப்தி செய்வதற்காகவாவது இதை உடனடி கொண்டு வரவேண்டும், நமக்கும் சில நேரங்களில் பட்டு தேவைப்படுகிறது, சில நேரங்களில் பட்டு வாங்குவதில் ஆடவர்களுக்கு இதனால் தொல்லை இல்லாமல் இருக்கும். ஆகவே பெண்களின் திருப்திக்கு வேண்டியாவது இந்தப் பட்டுத் தொழிலை, ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக மேற்கு நாடுகளுக்கு எல்லாம் அனுப்பிக்கொண்டிருந்த இந்தப் பட்டை அதிகமாக உற்பத்தி செய்வதற்காக இந்த பட்டுத்தொழிலை நடத்துவதற்கே உடனே முயற்சிக்கலாம் என்று கேட்டுக்கொள்கிறேன் அடுத்ததாக,

(4) A glue and gelatine factory with the huge quantity of tannery flushings available

நம்முடைய நாட்டில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கின்றன. தோலைப் பதனிடும்பொழுது அதிலுள்ள கொழுப்பையும் சத்தையும் வீணாக்காமல் எதை உற்பத்தி செய்யலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள், அடுத்ததாக,

(5) Development of Coir Industry in Tirunelveli and Ramanathapuram Districts.

(6) Metal Industry with improved alloys

இதற்காக இன்று எத்தனையோ இன்ஜினியர்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்தெந்த உலோகங்களிலிருந்து புதிய உலோகம் கிடைக்கும் என்பதைப் பற்றி ஆராய்வதற்காக இம்மாதிரிப்பட்ட தொழிற்சாலைகளை உடனடி ஏற்படுத்தவேண்டும். அடுத்ததாக,

7) Wood Industry

8) Pigment manufacturing and paint mauufacturing and mixing;

(9) Manufacture of Musical Instruments;

(10) Ink Manufacture;

(11) Boot Polish making;

(12) Manufacture of Purchasement Paper

(13) Evolving plastie from materials like cashew kernals, etc

சபாநாயகர் அவர்களே நான் இந்த பிரச்னையிலிருந்து சற்று விலகுவதற்குக் காரணம், இந்தச் சபையில் பேசப்பட்ட சிலவற்றிற்கு பதில் அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நமது நிதி