உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

பார்களேயானால், எங்களால் முடியுமானால் அந்தப் பொறுப்பிலிருந்து நாங்கள் தப்பிக்கொள்ள மாட்டோம்.

இந்த முதுகுளத்தூர் பிரச்னையைப் பொறுத்தவரையில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் 'கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்று சொல்லுவார்கள். அதாவது பார்த்தவர்கள் சொல்லவில்லை, சொன்னவர்கள் பார்க்கவில்லை என்னைப் பொறுத்தவரையிலே கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர் என்பதல்ல நான் நேரடியாகப் பார்க்கவில்லை. விண்டவர் கண்டு சொல்லியதை எண்ணிப் பார்க்கிறேன். இருவரும் உணர்ச்சி வேகப்பட்டிருப்பதை நான் நிச்சயமாக உணர்கிறேன். இந்த உணர்ச்சி மதவெறியின் காரணமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. அதுபோலவே, இந்த உணர்ச்சியினால், இந்த அரசியலுக்கு லாபம் அதிகமா, அந்த அரசியலுக்கு லாபம் அதிகமா என்று சொல்ல தேவைஇல்லை. என்னுடைய மதிப்பிற்குரிய கன்னியாகுமரி அங்கத்தினர் அவர்கள் ஆதித்திராவிட மக்களின் அல்லலைப்போக்க எல்லோரும் ஒன்றாகக்கூடி அரசியல் கட்சிகள் யோசித்தோம் என்று சொன்னார்கள். அம்மாதிரி கூட்டம் நடைபெற்ற தகவல் எனக்கு இல்லை. அதுபற்றி என்னை அணுகியிருந்தால், எங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர் ஆலோசனைகூறி நாங்களே அதை நடத்த ஒத்துக்கொண்டிருப்போம். ஆதித்திராவிட மக்களைக் காப்பாற்ற இந்த நாட்டை ஆளுகின்ற சர்க்கார் கொஞ்சம் அதிகசிரமமான காரியங்களில் ஈடுபட்டிருந்தால்கூட அதை நாங்கள் தாக்கிக்கொள்ளுவோம் என்று பணிவன்புடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன். ஏனென்றால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் ஒடுக்கப்பட்டு பாழ்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களின் உரிமை உணர்ச்சி இந்த 20 ஆண்டு காலமாகத்தான் ஏற்பட்டது. அதற்குக் காரணம் நாங்கள்தான் என்று காக்கிரஸ்காரர்கள் மார்தட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நாங்கள்தான் என்று நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம், அதற்குக் காரணம் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கு இந்த நாட்டை ஆளுகின்ற சர்க்கார் சரியான நேரத்தில் சரியான முறையைக் கையாளவில்லை. அவர்கள் ஏன் சரியான போலீஸ் படையை அமைத்துக்கொள்ளவில்லை? ஏன் 8 பேர்களை சிறையில் போட்டார்கள் என்று கேட்பது மட்டுமல்ல. நமது போலீஸ் அமைச்சர் அவர்களுடைய அறிக்கையில் முதல்பாராவில்