உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பதிலாக, அவர்கள்மேல் எடுக்கப்படுகிற பலாத்காரச் செயல்களுக்கு, நீங்களும் உங்கள் சுயநலத்தின் காரணமாக உடந்தையாக இருக்கிறீர்கள் என்கிற காரணத்தினால் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்கிறேன்.

மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் அவர்கள் இன்றைக்கும்கூட எண்ணிக்கையைப் பாருங்கள் என்று சொன்னார். நேற்றும் சொன்னார், சந்தர்ப்பம் கிடைக்கிற நேரத்தில் எல்லாம் சொல்வார். எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். எண்ணிக்கையில் பெருத்தவர்கள் அவர்கள். ஆனால் நிச்சயமாக நியாயம் என்பது எண்ணிக்கையைப் பொறுத்தது மட்டும் அல்ல. எண்ணத்தைப் பொறுத்துத்தான் இருக்கிறது. மனதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

அவர்கள் 150 பேர்கள் அங்கே இருக்கிற காரணத்தினாலே நாங்கள் இங்கே 40 பேர்கள் இருக்கிற காரணத்தினாலே, இந்தப் பக்கத்திலுள்ள கந்தசாமி கருப்பாக இருக்கிறார். காக்கையும் கருப்பு தான். ஆகவே கந்தசாமியும், காக்கைதான் என்று சொன்னால், அவர்கள் 150 பேரும் ஆம் என்றால் அந்த ஒரு காரணத்தினாலே கந்தசாமியும் நிச்சயமாகக் காக்கை ஆகிவிடமாட்டார். கந்தசாமி கருப்பாக இருக்கலாம். காக்கையும் கருப்பாக இருக்கலாம். அந்த ஒரு காரணத்திற்காக கந்தசாமி காக்கை ஆகமாட்டார் என்று இந்தப் பக்கத்தில் இருக்கிற எண்ணிக்கையில் அவர்களைவிடச் சிறுத்த நாங்கள் 40 பேர் சொன்னால் எண்ணிக்கையில் சிறுத்தவர்கள் என்பதற்காக இது "இல்லை" என்று ஆகிவிடாது. இப்படித்தான் நியாயத்தை, நீதியை இந்த ஜனநாயக காலத்தில் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயித்துவிட முடியாது. நல்ல ஜனநாயகப் பண்பை ஸ்தாபிக்கக்கூடிய திறமை வாய்ந்த நிதியமைச்சர் அவர்கள் தாங்கள் எண்ணிக்கையில் பெருத்திருக்கிறோம் என்பதற்காக எண்ணிக்கையைக்கொண்டு நியாயத்தை நிலை நாட்டிவிடுவோம் என்று எண்ணி அப்படிப் பேசியிருப்பார்கள் என்றால் அது நிச்சயமாக முடியாது என்பதை எதிர்கட்சி நன்றாக உணர்ந்திருக்கிறது.

நிதி அமைச்சர் திரு. சி. சுப்ரமணியம்: நான் நேற்று சொன்னது நியாய அநியாயத்திற்கு எண்ணிக்கையைப் பாருங்கள் என்று சொல்லவில்லை, மக்கள் யார் பேரில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு எண்ணிக்கையைப் பார்க்கச் சொன்னேன். நியாய அநியரியத்திற்குச் சொல்லவில்லை, இந்த அளவு