உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அழைப்பிதழ். அவரைப்பற்றி இப்போது வெறுத்து ஒதுக்கத் தக்கவராகப் பேசிக்கொண்டிருக்கிறோம். அங்கே அவர்கள் உள்ளத்தில் வைத்துக் கொண்டாடுபவராக இருக்கிறார். உலகத்தார் வைத்திருக்கின்ற கருத்து இன்றைய தினம் இந்த ராஜ்ய ஆட்சியாளர் வைத்திருக்கின்ற கருத்தாகத்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. அவர்கள் கருத்தே நாம் வைக்கவேண்டும் என்பது இல்லை. ஆனால் உலகத்தார் வைக்கின்ற கருத்துக்கு மதிப்பு அளிக்கவேண்டும். உலகத்தார் எல்லாம் போற்றுகின்ற உத்தமராக முத்துராமலிங்க தேவர் இருப்பாரானால் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அவரோடு கலந்து பேசி ஒரு சமரச சூழ்நிலையை அந்த பிராந்தியத்தில் உண்டுபண்ண ஏன் முயற்சிக்கக்கூடாது? அப்படி இவர் பேசுவதை வேண்டாமென்று யார் குறுக்கிட்டார்கள்? குறுக்கிடுகிறார்கள் என்றால் ஏன் குறுக்கிடுகிறார்கள்.

முதுகுளத்தூர் பிரச்னையாக இருந்தாலும் சரி, முரளி கபே பிரச்னையாக இருந்தாலும் சரி, எந்தப் பிரச்னையும் முளையிலேயே அணுகினால்தான் அதை தீர்க்க முடியும் என்ற அரசியல் தத்துவத்தை உங்களுக்கு எடுத்துக்கூற கடமைப் பட்டிருக்கிறேன். ஜாதிப் பெயர் குறிக்கும் பலகையை எடுக்கவேண்டுமென்று கிளர்ச்சி செய்கிறார்கள். இதை நடத்துகின்றவர் பெரியார் ராமசாமி. 700 தொண்டர்களுக்கு மேல் சிறைச் சென்றிருக்கிறார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லுகையில் சொன்னார்கள். நான் பத்திரிகையில் பார்த்தேன், கேரள சர்க்கார் உணவு விடுதிகளிலே ஜாதி அறிவிப்பு பலகைகளை தாங்களாகவே நீக்கிவிட வேண்டும் என்று ஒரு அறிக்கை மூலம் உத்தரவு போட்டிருக்கிறார்கள். அவைகளை நீக்காவிட்டால் சர்க்காரே அந்த நடதடிக்கை எடுத்துக்கொள்ளும் என்று இருக்கிறது. அதற்கு ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கிற பணத்தில் இருந்து எடுக்க வேண்டியதில்லை. கருணையோடு மனம் வைத்தால் இந்தப் பிரச்னையை உடனடியாக தீர்க்க முடியும். திரு. இமானுவல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையில் அவர் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ் நாட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். இமானுவல் ராமனாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல, உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே