92
கனம் போலிஸ் அமைச்சர் கூறுகிறார் அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்று. S. A. P. 8. M. S. P' 4, Armed Reserve Police 4, Wireless set 4, அனுப்பி வைத்திருப்பதாகப் புள்ளி விபரம் தருகிறார். அங்கே இருக்கும் வீடுகள் ஏராளமாகத் தீக்கிரையாகிக்கொண்டிருக்கும்போது தீயை அணைப்பதற்காக தீ அணைப்புப் படையை அனுப்பவில்லை. சில நாட்களுக்கு முன்தான் இந்த தீ அணைப்பு வாரம் கொண்டாடினார்கள். அந்த விழாவில் ஒரு படத்தைப் பார்த்தேன். உயரமான மாடியில் தீ பிடித்துக்கொண்டால் கீழே குதித்துவிடவேண்டும். கீழே ஒருவலை கட்டப்பட்டிருக்கிறது, அந்த வலையை உபயோகப்படுத்தவில்லையானால் உயிரிழக்க நேரிடும் என்று காட்டினார்கள். ஆனால் அதுபோன்ற வலை நமது அரசிடம் இல்லை என்று அதிகாரி கூறினார், தீ அணைப்புப் படை அரசாங்கத்திடம் இருந்தும், பயன்பட வேண்டிய சமயத்தில் உபயோகப்படுவதில்லை. அங்கு தீ பரவாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அங்குள்ள கட்சித் தீ பரவாமல் தடுப்பதற்கும் தவறிவிட்டது,
திரு. ஏழுமலை அவர்கள் எங்கள் கட்சி நிதானமான கட்சி என்று சொன்னார். ஆம். யார் இல்லையென்று சொன்னது. பார்த்த பிறகுதானே தெரிகிறது. அங்கே இரண்டு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஒன்று காங்கிரஸ் கட்சி, மற்றொன்று பார்வார்ட் பிளாக். நாடார்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். எனக்கு காங்கிரஸ் நாடார்களைப்பற்றி தெரியாது. ஆனால் நாடார்களைப்பற்றி தெரியும். நாடார், அவைகளை நாடார்.
இந்த 10 ஆண்டு காலமாக நான் கேட்கிறேன், நீங்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கு எந்த ஜனநாயக சர்க்காராவது பயன்படுத்தி இருக்கிறதா? நீங்கள் வணங்கும் ஆண்டவன்பேரிலே கேட்கிறேன். நீங்கள் கடைப்பிடிக்கும் காந்திய நெறியின் பெயராலும் கேட்கிறேன். உங்கள் நெஞ்சிலே கைவைத்துச் சொல்லுங்கள், இத்தனை ஆண்டுகாலமாக நம் நாட்டில் நடந்த துப்பாக்கிப் பிரயோகம் உலகத்திலே எந்த நாட்டிலேயாவது இந்த அளவுக்கு நடந்ததுண்டா? நீங்கள் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்துவதை நாங்கள் கண்டித்தால் உடனே போலிஸ் அமைச்சர் "நாங்கள் இங்கு மட்டுமா துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினோம். இதற்கு முன்னேயே தூத்துக்குடி-