உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

An armed gang of 500 Thevais which went about setting fire to Palla houses and looting properties in Pacheri, Kaloorani and surrounding villages was encountered by a Special Armed Police party under the load of Inspector of Police, Mana madurai, at Malavarayanendal at 5 p.m. The Police ordered the mob to surrender their arms. As the mob defied the Police and pelted stones at them, the Taluk Magistrate, Sivaganga. who was with the police party ordered the police to open fire. Even after three rounds were fired the mob still advanced towards the police party, whereon three more rounds were fired. One person who was injured as a result of the firing died on the way to the hospital.

என்று இருக்கிறது இது 500 பேர். அது 300 பேர். போலீஸின் முறையில் கொஞ்சம் தன்மை இருக்கவேண்டுமென்று சொல்வது, அந்த இடத்தில் போலீஸ் அதிகாரி மனிதரை மனிதரென்று சுட்டார்கள். கீழத் தூவலில் சுட்ட அதிகாரி மனிதர்களை குருவிகள் என்று நினைத்து சுட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. இதற்கு அமைச்சர் அவர்கள் சாமர்த்தியமாக பதில் அளிக்கக்கூடும். 16-ம் தேதி துப்பாக்கி பிரயோகம் செய்த பிறகு 20-ம் தேதி மக்கள் அடங்கியிருந்தார்கள் என்றால், 20-ம் தேதி கையாண்ட நடவடிக்கைகளை ஏன் 16-ம் தேதி கையாண்டிருக்கக்கூடாது? அப்படியென்றால் இந்த ஐந்துபேர் செத்திருக்கமாட்டார்களே. கீழத்தூவலில் போலீஸார் சுட்ட விதத்தைப் பார்க்கும்போது இமானுவேல் கொலை பற்றிய துப்புக்களையே அதனால் அழித்துவிட்டார்களோ என்று நினைக்கிறேன். பாகிஸ்தானில் லியாகத் அலிகானை ஒருவன் சுட்டுக்கொன்றபோது எப்படி அங்கிருந்த கூட்டத்தினர் அவனைப் பிடித்துப் பிய்த்துக் கொன்றுவிட்டதினால் யார் சதி செய்தார்கள் என்பதைப் பற்றிய ஆதாரமே பாகிஸ்தான் அரசாங்கத்திற்குக் கிடைக்காது போனது மாதிரி, இமானுவேல் கொலைபற்றி ஏதாவது ஆதாரம் கிடைக்கும்படி இருந்தாலும் போலீஸார் நடந்துகொண்ட விதத்தில் அது கிடைக்காமல் அதை இழந்து விட்டார்கள். அந்த ஆதாரங்கள் கூட இந்தத் தீயில் பொசுக்கப்பட்டு போயிருக்கலாம். இது ஊகமே தவிர வேறொன்றும் இல்லை. அப்படியும் இருந்திருக்கக் கூடும். விசாரணையில் இருப்பதால் அதைப்பற்றி நான் கூடுதல் சொல்லவில்லை. நமது அமைச்சர் அவர்கள் பேசுகிறபோது இவ்-