97
வளவு சொல்கிறவர்கள் போலீஸை வாபஸ் வாங்கவேண்டுமென்று பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். அவர் யாரை மனதில் வைத்துக்கொண்டு சொன்னார்களோ, தெரியாது. ஆனால் எங்கள் கழகத்தைப் பொறுத்த வரையில் எங்கள் கழகத்தின் சார்பில் பேசிய அம்மையார் அவர்கள் போலீஸை வாபஸ் வாங்கக்கூடாது என்றுதான் சொன்னார்கள். வாபஸ் வாங்க வேண்டுமென்று சொல்லவில்லை. நடைபெற்ற சம்பவங்களுக்கு ஒரு "ஜூடீஷியல் என்கொயறி" நடத்தப்பட வேண்டுமென்பதைத் தான் நாங்கள் அத்தனை பேரும் வலியுறுத்துகிறோம். அது தேவை என்று சொல்லும்போது, ஏற்கெனவே விசாரித்த அதிகாரி நல்லவர் அல்லவா, திறமைசாலி அல்லவா என்று கேட்பதில் பயனில்லை. அது, அமளி இருந்தபோது நடைபெற்றது. காலையில் ஒரு விவாதத்திற்குப் பதிலளிக்கையில் அமைச்சர் அவர்கள் சொன்னார்கள், அதை ஏற்படுத்திய காலகதி அமைதி நிலவும் என்று எதிர்பார்த்தோம் என்றார்கள். ஒரு பக்கத்தில் விசாரணை நடக்க இன்னொரு பக்கத்தில் அமளி நடந்துகொண்டேயிருந்தது. ஜஸ்டிஸ் கட்சி காலத்திலும் சரி, பிரிட்டிஷ் நிர்வாக முறையிலும் அமளி எல்லாம் அடங்கிய பிறகுதான் விசாரணை நடத்துவது என்ற கொள்கையைக் கையாண்டிருந்தார்கள். நிதியமைச்சர் சொன்னபோது அமளி பரவாது என்ற எண்ணத்தில் அதைச் செய்தோம் என்கிறார். நாட்டு மக்கள் அதிகாரிகள் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளும் அதற்குக் காட்டுகிற காரணங்களும் போதுமானதல்ல என்று எண்ணுகிறார்கள். இந்த அளவிற்குக்கூட மக்களுக்கு மதிப்பளிக்கக்கூடாதா? எல்லா இடங்களுக்கும் சேர்த்து ஒரு "ஜூடிஷியல் என்கொயறி" செய்வதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு ஏற்படும் தயக்கம் என்ன? எந்தக் கட்சியையும் ஆதரிக்க வேண்டும் என்பதற்காக இந்த விசாரணை நடத்தவேண்டுமென்று சொல்லவில்லை. நாங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட நீதி விசாரணை கேட்கவில்லை. ஆனால். இந்த விஷயத்திற்குக் கேட்பதற்குக் காரணம், இது சந்தையிலும், அங்காடியிலும், வீடுதோறும் உணவு விடுதிகள்தோறும், நாலைந்து பேர்கள் கூடுகிற இடங்களில் அடிதடி ஏற்படும் அளவிற்கு இது ஒரு பெரிய பிரச்னையாய் இருந்துவருகிறது. இது பேச்சுத்திறமையைக் காட்டும் பிரச்னையாயிருந்தால் உங்கள் வாதங்களை நான் ஏற்றுக்கொள்வேன். அதனால் எனது வாதத்திறமையை உயர்த்திக்கொள்ளப் பயன்படுத்திக் கொண்டிருப்பேன். இன்று நகரத்தில் எந்தப் பக்கத்தில் போனாலும் மாலை நேரத்தில் உணவு விடுதிகளில் எல்லாம்,