உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

மாகப் பரவியிருந்தால் கலப்புத் திருமணம் அதிகமாக நடந்திருக்கும். சுயமரியாதைக் கழகம் மற்ற பல பகுதிகளில் அதிகமாகப் பரவியிருக்கின்ற காரணத்தினால்தான் இன்று நாட்டில் பல பகுதிகளிலும் கலப்புத் திருமணம் அதிகமாக நடைபெற்றுவருகிறது, கலப்புத் திருமணத்தில்தான் சுவை இருப்பதாக அறிந்ததின் காரணமாகத்தான் பல பகுதிகள் வரவேற்றன. சுயமரியாதை இயக்கம் பரவி இருந்திருக்குமானால் முதுகுளத்தூர் வட்டாரத்திலும் ஜாதி வெறி தலைவிரித்தாடியிருக்காது இன்றைக்கு யார் மீது குற்றச்சாட்டுகளைக் கூறுகிறீர்களோ, அவர் மூலமாகத்தான் கழிந்த 25 ஆண்டு காலமாக காங்கிரஸ்காரர்கள் வோட்டுகள் வாங்கிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் இன்றையத்தினம் அந்த வோட்டுகள் காங்கிரசுக்குக் கிடைக்கவில்லை. மேலும் எங்கே கிடைக்காமல்போய்விடுமோ என்ற பயம் ஆட்சியாளர்களுக்கு, எங்கே இந்த வோட்டுகளையெல்லாம் திரு. வி. கே. ராமசாமி முதலியார் சொண்டுபோய்விடுவார்களோ என்ற பயம். எங்களைப்பொறுத்தவரையிலும் அவர்களுக்கு வாங்கிக்கொடுத்தாலும் நிச்சயமாக எங்களுக்கு வாங்கித்தரமாட்டார் என்பது நிச்சயம். ஆகவே எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையே இல்லை. ஆகவே வோட்டுகுவதற்கு மாத்திரம்தான் இவைகளை எல்லாம் செய்கின்றார்களே தவிர அந்தப் பகுதியிலுள்ள ஆதித்திராவிட மக்கள் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய அளவுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள். இன்றைக்கு 2.785 ஆதித்திராவிட மக்களுடைய வீடுகளும், 107 தேவர்களுடைய வீடுகளும் சாம்பலாக்கப்பட்டன என்று கணக்குக் கொடுக்கின்றீர்கள். அந்த 2,785 அதித்திராவிடர்களுடைய வீடுகள் எல்லாம் வெறும் ஓலைக்குடிசைகள் தானே. இவர்களையெல்லாம் இந்தக் குடிசைகளில்தானே இதுவரை விட்டுவைத்திருக்கிறீர்கள். இன்றுவரை அவர்களுக்கு என்ன செய்துகொடுத்திருக்கிறீர்கள். இதுவரை நீங்கள் எங்கே போயிருந்தீர்கள். ஆதித்திராவிடர்களாகிய அவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட முழங்கால் அளவுக்கு சேற்றிலே வாழ்கின்றார்கள். குறிப்பாக என்னுடைய தொகுதியில் ஆதித்திராவிடர்கள் இறந்துபோனால் அவர்களுடைய பிணத்தைத் தூக்கிக்கொண்டுபோவதற்கு பக்கத்திலுள்ள வயல்களைக் கடந்துபோகவேண்டும். நல்ல பாதை கிடையாது. வயல் முதலாளிகள் பாதையை விட்டுத்தரமாட்டேன் என்று சொல்லுகின்றார்கள். இவற்றையெல்லாம் அமைச்சர் கக்கன் அவர்கள் அங்கு வந்திருக்கும் நேரத்தில் அவர்களிடத்தில்