பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


காந்தீயம் எந்த இடத்திற்குச் சொந்தமாக இருந்ததோ, அந்த இடத்தை விட அது மற்றவர்களின் இடத்தில்தான் பெருமை பெற்றிருக்கிறது.

காந்தீயத்தோடு காங்கிரசைச் சேர்த்து எண்ணுவது பெரும்பாலோர் வாடிக்கை. வாடிக்கை என்றுதான் சொன்னேனே தவிர, அது உண்மை என்று சொல்லவில்லை.

ஏனென்றால் காந்தீயத்தோடு காங்கிரசைச் சேர்த்துப் பார்ப்பது பொருத்தமானது; எதிர்பார்க்கத் தக்கது. ஆனால் அந்த காங்கிரசிலிருந்து மாறுபட்ட எதிர்க்கட்சிகளும் காந்தியத்துக்கு மரியாதை காட்டுவதுதான் பெருமை உடையது.

காந்தீயம்
தத்துவமாகி விட்டது !

ஏனென்றால் காந்தியம் என்பது இப்போது தத்துவம் ஆகி விட்டது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வட ஆற்காடு மாவட்டத்திலுள்ள வேலூரில் காந்தியார் சிலையை நான் திறக்க வேண்டுமென்று அந்த நகராட்சியினர் தீர்மானம் போட்டனர். அப்போது அந்த நகராட்சி தி. மு. கழகத்திடம் இல்லை.

இராசாசி அவர்கள் அரசாட்சி செலுத்திய காலம் அது வேறொரு தீர்மானத்தைப் போட்டு சில காங்கிரஸ்காரர்கள் "அண்ணாதுரையா காந்தி சிலையைத் திறப்பது ? அப்படிச் செய்தால் அமளி நடக்கும்" என்று மிரட்டினர். ஆனால் வேலூர் நகராட்சி மீண்டும் தீர்மானம் போட்டது. உடனே ஒரு காங்கிரசுத் தலைவர் இராசாசியைப் பார்த்து "இதற்கு அனுமதித்தால் அமளியை ஏற்படுத்துவோம்" என்றார்.

ஆனால் இராசாசி “காந்தியாரைக்காங்கிரசார் பாராட்டுவதில் பெருமையில்லை. எதிர்க் கட்சியினர் பாராட்டுவதில்தான் பெருமை. அப்போதுதான் அவர் மகாத்மா” என்றார். ஆனால்