பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இதையெல்லாம் படிக்கிற மக்கள் எ“ன்ன அண்ணாதுரை ; காந்தியின் நேர் வாரிசா? மற்றவர்களுக்கு இல்லாத காந்தி பக்தி இவனுக்கென்ன வந்தது? பாவிகள்ளுக் கடைகளைத் திறக்கமாட்டேன் என்கிறானே” என்று கூறுகிறார்கள்.

அந்த மக்கள் மீது எனக்குக் கோபம் வரவில்லை. முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தின் மீது தான் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

தமிழகத்தில் நாம் மதுவிலக்குக் கொள்கையை அமுல் படுத்துகிறோம். அதனால் 30 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.

இருந்தாலும் மூன்று கோடி மக்களுக்கு அவர்களது இல்லங்களில் சந்தோஷம் நிலவட்டும், தர்மம் நிலைக்கட்டும்; அமைதி தழைக்கட்டும் என்பதற்காக மதுவிலக்குக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இதற்காக 30 கோடி ரூபாயை இழக்கிறோம்.

ஆனால் இப்படிக் கஷ்டப்படும் தமிழகத்திற்கும் பாராட்டு; பீர்க்கடை திறக்கும் பம்பாய்க்கும் பாராட்டு என்றால் என்ன பொருள்?

வேண்டாம்
'விழாக் காலத்துப்' பேச்சு

பிறகு — காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றுமை இருக்க வேண்டும் என்ற பேச்சு —விழாக் காலத்துப் பேச்சாகத்தான் போய் விடும்!

மதுவிலக்கு உண்டு என்றால் இந்தியா முழுவதும் உண்டு. இல்லை கள்ளுக்கடையைத் திறக்கிறோம் என்றால் இந்தியா முழுவதும் திறந்து விடுங்கள்.