பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

அவர் ஓர் விடுதலை வீரர், நமது நாட்டு அடிமைத் தளைகளை உடைத்தெறிந்த அஞ்சா நெஞ்சினர் என்பாரும்;

அவர் ஓர் வேதாந்தி, பழைய தத்துவம்' பலவற்றுக்குப் புதிய விளக்கமளித்தவர் என்பாரும்;

அவர் ஓர் சமதர்மவாதி, ஏழைபங்காளர், ஏழைகள் புதுவாழ்வு பெற வழிவகுத்தவர் என்பாரும்;

அவர் கிராம ராஜ்யம் அமைத்திட முனைந்தவர் என் பாரும், இது போல, அவரிடம் அவரவர் கண்டவற்றினைக் கொண்டு அளவிட்டு வியந்து பாராட்டுவோர் பல்வேறு வகையினர் உளர். இவர்களில் எவருடைய பார்வையில் முழு காந்தி அடிகள் தெரிகிறார் என்பது, காலமெல்லாம் ஆராய்ந்தறிந்து கொள்ளவேண்டிய ஒரு பிரச்சனையாகும். காரணம், ஒரு மனிதர் என்ற முறையிலே மட்டும் கவனிக்க வேண்டியவர் அல்லர்; அவர் காலத்தின் சின்னம், ஓர் எழுச்சியின் அடையாளம், ஒரு மறுமலர்ச்சியின் உருவகம்.

அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டும் திருப்தி அடைய விரும்பினால், அவருடைய அறப்போர் மாண்பினை மட்டும் வியந்து பாராட்டுவதுடன் இருந்து விடத் தோன்றும்.

ஆனால், அரசியல் துறையிலே மட்டும் அரும் பெரும் வெற்றி பெற்று, மற்றத் துறைகளிலே ஈடுபடாதிருந்தவர் அல்ல.

அவர் எல்லாத்துறைகளிலும் தமது முத்திரையைப் பொறித்துச் சென்றவர்; எல்லாத் துறையினரும், எமக்காகவே. காந்தி அடிகள் வாழ்ந்தார், எமக்காகவே பணிபுரிந்தார் என்று சொந்தம் கொள்ளத் தக்க முறையிலே அவருடைய வாழ்க்கையும், தொண்டும் அமைந்திருந்தன.

இன்று, அவருடைய பிறந்தநாள், எல்லாத் துறைகளிலே உள்ளவர்களாலும் கொண்டாடப்படுவதற்கான காரணம். இதுவே. அவர் ஒரு நாட்டின் காலம் ! ஒரே ஒரு துறைக்கு

2