பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பண்டிதநேரு இங்கிலாந்து செல்கிறபோது அங்கு நடை பெறும் புகழ்மிக்க நாடகங்களைப் பார்ப்பது வழக்கம்.

தமிழகத்தில் அரசியல் உணர்வை ஊட்டிய சத்திய மூர்த்தி அவர்களுக்கு சங்கீத நடனம் ஆகியவற்றிலே பெரு விருப்பம் இருந்ததோடு—நாடகங்களில் அக்கறை கொண்டதோடு—சில நாடகங்களில் பங்கேற்று —வேடமும் தாங்கியிருக்கிறார்.

ஆகவே கலையும் அரசியலும் இணையக் கூடாது என்பது சரியல்ல—கலையிலும் அரசியலிலும் சரியானபடி இருக்க இயலாதவர்கள் தான் அப்படிக் கூறுவார்கள்.

ஆனந்த விகடனில், கல்கி எழுதியதாக நினைவு—ஒரு முறை அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது தன் பையிலிருந்த பொரி விளங்காய் உருண்டை ஒன்றை எடுத்துச் சாப்பிட்டாராம்.

உடனே எதிரில் இருந்த ஒருவர் கல்கியைப் பார்த்து ‘நீங்கள் காங்கிரஸ்காரரா' என்று கேட்டாராம். “ஆம்” என்றார் கல்கி. அதற்கு அவர், பொரி விளங்காயை காங்கிரஸ் காரன் சாப்பிடலாமா” என்று கேட்டார்."ஏன் சாப்பிடக் கூடாதா”? என்று கல்கி வினவினார்.

அதற்கு, அவர், பொரி விளங்காயைச் சாப்பிடுவதன் மூலம் அதிலுள்ள இனிப்பில் நாட்டமிருக்கிறது என்பது தெரிகிறது. இனிப்பில் நாட்டம் செலுத்தினால் தேசபக்தி வருமா” என்று கேட்டார்.

இதிலிருந்து தெரிவது— அரசியல் அடிப்படைக் கருத்து விவாதங்களுக்குப் பதில் தனி மனிதனைப் பற்றிய விவாதங்கள் வளருகிறது என்பதுதான்.

கல்கி அவர்கள் வேடிக்கையாகக் குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சி நடந்தது 30 வருடங்களுக்கு முன்! இப்போது கூட அரசியல் கருத்துக்களை விட்டு விட்டு, தனிப்பட்டவர்களை