பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாராட்டுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற பிரமை ஏற்படுகிறது.

சங்கீதம்-அதிலும் புராதனச் சங்கீதத்தை வளர்ப்பவர்கள் வாழ்நாளில் பல முறை சொல்லியிருப்பார்கள்; "எதற்காக நாம் இப்படி இருக்கிறோம்" என்று சலிப்படைந்து விட்டு, வீட்டிலேயுள்ள தமது மக்களைப் பார்த்து "எனக்கு இதிலே ஏதோ பிடித்த மேற்பட்டது! உனக்கு இந்த வேலை வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டு சங்கீதக் கலையை வளர்ப்பதில் ஈடுபட்டிருப்பார்கள்.

வீடு தேடி யாராவது ஆள் வந்தாலும் " ஆகா ! கச்சேரிக் காகத்தான் வருகிறார்கள்" என்று மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சிதான் ஆயிரம் பொற்காசுகளை விட அதிக மகிழ்ச்சி தரக் கூடியது. அந்த மகிழ்ச்சிதான் உயர்வானதும் கூட!

கலையின் ஒவ்வொரு துறையிலிருந்தும் பணியாற்றும் கலைஞர்கள் அந்தந்தத் துறைகளை நேர்த்தியாக வளர்ப்பது. மட்டுமல்ல, மற்ற நாட்டினரும் புகழத்தக்க விதத்தில் நற்பணி ஆற்றி வருகிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு நான் கம்போடியா நாட்டுக்குச் சென்றிருந்த போது, கம்போடியா நாட்டியம் பார்த்தேன். அந்த நாட்டியத்தைப் பற்றி முன்னமே எனக்கு நிரம்பச் சொல்லியிருந்தார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியைக் காண அமெரிக்கச் சீமான் வீட்டுப் பெண்கள் இருவர் வந்திருந்தனர்.

உடலோடு
உள்ளமும் ஆடும்

அந்த நாட்டு நாட்டியம் மிகவும் தாமதமாக நடப்பது. ஒரு பக்கமிருந்து கையை மறுபக்கம் கொண்டுவருவதற்குள் —ஒரு நிலையிலிருந்து காலை இன்னொரு பக்கம் கொண்டு