பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

வருவதற்குள் நான்கு முறை நாம் கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வோம் — அந்த அளவுக்குத் தாமதமாக நடக்கும். ஆனால் அதிலே நிரம்ப பாவம் இருக்கும் என்பார்கள்.

அமெரிக்கப் பெண்மணிகள் நாட்டியப் பெண்மணிகளைப் போலவே விரல்களை அசைத்துப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களால் முடிய வில்லை. அவர்களுக்குப் பக்கத்திலே அமர்ந்திருந்த நான் சொன்னேன் "கம்போடியா நாட்டியத்தைக் கற்றுக் கொள்ள - விரல்களை அசைக்கவே இவ்வளவு கஷ்டப் படுகிறீர்கள் - எங்கள் தமிழ் நாட்டு பரதநாட்டியத்தை எப்படி உங்களால் கற்றுக் கொள்ள முடியும்? கைகள் மட்டுமல்ல - கண்கள் மட்டுமல்ல - உடல் மட்டுமல்ல - உள்ள மெல்லாம் ஆடுமாறு ஆடுவார்கள்” என்றேன். அப்படிப்பட்ட நாட்டியத்தைக் காண விரும்புவதாக அமெரிக்கப் பெண்மணிகள் கூறினார்கள்.

இசை — நாட்டியம் மற்ற மற்ற துறைகளிலுள்ளவர்களில் பெரும்பாலோர்,வாழ்வின் பெரும்பகுதியை ஏழ்மையில் கழித்திருக்கிறார்கள்.

நாட்டுக்குக் கலைச் செல்வத்தைத் தருகிறவர்கள் விருது பெற்றிருப்பதால் தான் நான் பெருமைப்படைகிறேன். இத்தனை பண்டைக் கலைகளும் ஒரு சேர நவீன முறையில் அமைந்திருப்பதுதான் சினிமாத்துறை! நேர்த்தியாக அமைக்கப்பட்டு உள்ளத்தில் நெகிழ்ச்சியை — மகிழ்ச்சியை உண்டாக்கும் தலை சிறந்த சாதனமாக விளங்குவது சினிமாத்துறை. அந்தத் துறையிலும் சிறந்த கலைஞர்கள் விருது பெற்றிருப்பது பாராட்டுக்குரியது-- வாழ்த்துக்குரியது !

பண்பை விளக்கப்
பயன்படும் கலை

தமிழர்கள் வாழ்விலும் தாழ்விலும் வெற்றியிலும் தோல்வியிலும் கலையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். பண்பு முழுவதும் கலை மூலம் உணர்த்தியவர்கள் தமிழர்கள்.