பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93


எந்தத்துறையில் ஈடுபட்டாலும் திறமையோடு விளங்குகிறார்கள். ஆடவர்களை காட்டிலும் அதிக வெற்றியைப் பெறுகிறார்கள். மருத்துவத் துறையிலும் ஆசிரியத் துறையிலும் பெண்கள் முழுவதுமாக ஈடுபட்டால் மிகுந்த பயன் உண்டாகும்.

மருந்தைவிடக் கனிவுதான் நோய்க்கு மருத்தாகும். அப்படிப்பட்ட கனிவு இயற்கையாக பெண்ககளிடம் அமைந்திருப்பதை பார்க்கலாம்.

"மற்றத் துறைகளில் ஈடுபட்டால் வெற்றியைப் பெற மாட்டார்களா?" என்னும் ஐயப்பாடிருக்கும். அது தேவையில்லை. அதிலும் வெற்றிபெறுவார்கள். என்றாலும் மகளிர் ஆசிரியத்துறையிலும் மருத்துவத் துறையிலும் ஈடுபடுவது தனிச்சிறப்பாகும்.

திருவள்ளுவரை எந்த அளவுக்குப் பாராட்டுகிறோமோ, அதற்கு ஒப்பாக ஒளவையாரையும் தமிழகம் கருதி இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் எந்த நாட்டிலும் பெண்பாற் புலவர்கள் இருந்ததில்லை. அப்போது தமிழகத்தில் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் தனிச்சிறப்பு, நிலைாயன பெருமை அந்த நாட்டிலுள்ள இலக்கியக் கர்த்தாக்களையும் கற்றறிவாளர்களையும் பொறுத்திருக்கிறது. அதை வெறும் அரசியல் வாதிகளால் மட்டும் பெற்றுவிட முடியாது.

வெளிநாடுகளுக்குச் செல்கிற நேரத்தில், உங்கள் நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள்