பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94


இருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. எத்தனை மந்திரிகள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த நாட்டில் திறமை அதிகமாக இருக்கும் என்று யாரும் கணக்கிடுவதில்லை. அப்படிக் கணக்கு எடுக்கப்படுமானால். பீகார் மாநிலத்திற்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.

ஒரு நாட்டின் நிலையான பெருமைக்கும் செல்வத்துக்கும் ஊன்றுகோலாக இருப்பது கல்வியே. எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பொறியியல் வல்லுநர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் ? என்று தான் எந்த நாட்டிலும் கேட்பார்கள். அவர்கள் ஈட்டித் தருகிற வெற்றிதான் நாட்டின் பெருமையை உயர்த்த முடியும்.

இந்த நாடு ஏழ்மை நிரம்பிய நாடாக இருந்தாலும், வள்ளல் தன்மை உள்ள நாடாகும். தன்னுடைய நலத்தைக் குறைத்துக் கொண்டு. மற்றவர்களுக்கு உதவுவதில் அக்கறை கொண்டவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத்தாங்களே தியாகம் செய்கிறார்கள்.

என்னுடைய அனுபவத்தில் நான் படித்தபோது இப்படிப்பட்ட கட்டம் இருந்ததில்லை. என்னுடைய வரலாற்றுப் பேராசிரியர் உலகத்திலுள்ள பெருவீரர்களைப் பற்றி எல்லாம் சொல்லும்போது, வெளியே எட்டணா, ஆறணா என்று பண்டங்களின் விலையைக்