பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


கூறுவதும் காதில் விழும். இவ்விரண்டுக்கும் இடை யில் நான் கல்வி கற்றேன். இன்று அந்த நிலை இல்லை,

" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று சொல்வார்கள். ஆனால். இன்று யாம் பெறாததை எம்முடைய மக்கள் பெறட்டும் என்று பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தத் தலைமுறை தியாாகஞ்செய்து வருகிறது. ஒரு தலைமுறை தன்னைத் தியாகம் செய்துகொண்டால்தான், இன்னுொரு தலைமுறைக்குப் பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு நோய்வந்தால், தானே மருந்து சாப்பிடுவார்கள் தாய்மார்கள். இத்தகைய உண்மைத் தியாக உள்ளம் தாய்குலத்திற்கு உள்ளதைப் போல் வேறு யாருக்கும் இருக்க முடியாது.

ஆண்டுக்காண்டு மகளிர் கல்வி பெரு எண்ணி கையில் அதிகரித்து வருகிறது. கல்வித்துறையில் இந்த அரசாங்கம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. மகளிர் நல்லமுறையில் கல்வியில் தேர்ச்சி பெற்று இந்த நாட்டின் பெருமையை உயர்த்தித்தர வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

வகைப்பாடு : பெண் கல்வி
26-2-68 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி

கல்லூரிநான் விழாவிற்குத் தலைமை தாங்கி

ஆற்றிய உரை.