பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 பிற நாடுகளில் மீன்பிடிதொழிலில் ஈடுபடுகிறவர்கள் இலாபமடைகிறார்கள். நம்நாட்டில் இத்தொழில் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனாலும், இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் வருமானமின்றித் தாழ்ந்து ஒதுக்கப்பட்டுச் சலிப்படிைந்து இருக்கிறார்கள்.

அவர்களுக்குக் கிடைக்கிற வருவாய் அதிகரித்து ஆதாயம் கிடைக்கச் செய்ய இந்திய அரசும் தமிழக அரசும் முன்வந்துள்ளன.

மீன் பிடிப்பதைப் பாதுகாக்கவும், எங்கே மீன் அதிகம் கிடைக்கும் என்பதைக் கண்டறியவும் தக்க கருவிகள் உள்ளன. இந்தக் கருவிகளை இயக்க இங்கே பயிற்சி அளிக்கப்படும்.

இந்த நிலையம் முழு அளவும் வடிவம் பெறும் போது, 60 இலட்சம் மூலதனம் கொண்டதாக இருக்கும். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு டிராலர் என்னுங் கப்பல் தேவை. அந்தக் கப்பலை நிறுத்த மீன்பிடி துறைமுகங்கள் தேவை.

நிலவளம் போலவே கடல் வளமும் முக்கியமானது. நிலவளத்வைப் பெருக்குவது கடினமானது. கடல் விதைக்காமலே பயன்தருவது.

அதிலுங்கூட ஒன்றைக் கவனிக்கவேண்டும். 4 மைல் 5 மைல் தொலைவுக்குள்ளேயே மீன் பிடித்துவிட்டால், சிறிய மீன்கள் வெகுவாகப் பிடிக்கப்பட்டு வளர்ச்சி குறைந்து வருகிறது. இதற்கு ஆழ்கடலுக்குச் செல்ல டிராலர் தேவை.