101
டிராலர் தருவிப்பதில், அந்நியச் செலவாணிக் கஷ்டம் குறுக்கிடுகிறது. அமைச்சர் ஜகஜீவன்ராம் கூட, நேற்று அந்நியச் செலவாணிச் சிக்கலைச் சமாளித்து 20 டிராலர்களைத் தருவிப்பதாகச் சொன்னார்கள். அதில், சென்னைக்குக் கணிசமான பங்கை ஒதுக்கித் தர வேண்டும்.
இந்தப் பயிற்சி நிலையத்திற்குத் தேவையான இடத்தைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மீதியுள்ள நிலத்தையும், தமிழக அரசு ஒதுக்கித் தரும். அதில் சில பேர் குடியிருப்பதால், ஒதுக்கித் தருவதில் தயக்கம் ஏற்படலாம். அந்தத் தயக்கத்தை அதிகம் பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும். இப்படி ஒரு முக்கிய காரியத்திற்கு உதவவில்லை என்றால், நிலம் வேறு எதற்குத்தான் பயன்படப் போகிறது?
வகைப்பாடு : வாணிபம் தொழில்—மீன் பிடித்தல்
(11-6-68 அன்று சென்னையில் மைய அரசு மீன் பிடி பயிற்சி நிலையத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை)
27. ஜனநாயகப் பயிற்சிக் கூடங்கள்
ஆடவரும், பெண்டிரும், வாலிபர்களும், வயோதிகர்களும் செங்கற்பட்டு மாவட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆக்கப்படுகிற இந்த விழாவில் பங்கு கொண்டிருப்பது—இந்த முடிவு எந்த அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது