பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


என்பதைத் தெளிவாக்கியுள்ளது. "ஒரு சர்க்கார் அலுவலகம் எங்கிருந்தால் என்ன? எங்கே மாற்றப்பட்டால் என்ன?" என்றில்லாமல் நாட்டு மக்கள் அக்கறை காட்டுவது நீண்டநாள் விருப்பம் நிறை வேறுகிறது என்பதற்கு அரிய எடுத்துக்காட்டு.

சொந்தக் கட்டிடத்தில் தலைமையகம் இன்று இல்லாமலிருந்தாலும் முறையே பொதுப்பணி அமைச்சரும், வருவாய்துறை அமைச்சரும், கூட்டுறவுத்துறை அமைச்சரும் கட்டிடம் எழும் என்னும் உறுதியை அளித்திருக்கிறார்கள். அலுவலக மாளிகை, எழில் மிக்க கட்டிடங்கள், அலுவலர் குடியிருப்புகளும் எழ இருக்கின்றன. காஞ்சி தலைநகர் ஆவதற்கு எல்லா விதத்திலும் தகுதி வாய்ந்தது என்பதை வரலாற்றுச் சான்றுகளுடன் அமைச்சர்கள் கருணாநிதியும், மதியழகனும் எடுத்துக் கூறினார்கள்.

இப்படிக் காஞ்சிபுரம் தலைநகர் ஆக்கப் படுவதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. முன்னுள் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களும் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னுலிருந்தவர்கள் செய்ய நினைத்த நல்ல காரியங்களை நிறைவேற்றுவது எனது கடமை. முன்பிருந்தவர்கள் தேவையில்லை என்று விட்டு விட்டாலும், அது நன்மை தரத்தக்கதாயிருந்தால், அப்படிபட்ட நல்லவை நடைபெற ஒட்டாமல் குந்தகம் செய்யமாட்டேன் என்பதனை எடுத்துக்காட்ட இந்த தலைநகர் மாற்றம் செய்யப்படுகிறது