பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


என்பதை அவர்கள் அறியவேண்டும். இந்த விழாவை ஒட்டிய சிறப்புமலர் ஒ ன் றி ல் பக்தவத்சலம் "செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகரம் மாவட்டத்துக்கு வெளியிடத்தில் இருப்பது அவ்வளவாகத் திருப்தியளிக்கவில்லை” என்று எழுதியிருக்கிறார்.

மாவாட்டத் தலைநகராகக் காஞ்சிபுரம் ஆனாலும் வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டே விளங்கும் என்னுஞ் செய்தியை வழக்கறிஞர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு தலைநகரிலேயே எல்லா அதிகாரங்களும் குவியும் நிலை நீடிக்கக் கூடாது, அது ஏற்றதல்ல. சோழ மண்டலத்தின் தலைமை ஒரு காலத்தில் தொண்டை மண்டலம் இருந்தாலும் துறைமுகப் பட்டிணங்களாக மாமல்லபுரமும், சதுரங்கப் பட்டிணமும் விளங்கின. அது போலக் காஞ்சிபுரமும் தலைநகராக இருப்பினும், வழக்கு மன்றத் தலைநகராகச் செங்கற்பட்டு நீடிக்க வேண்டும். காஞ்சிபுரம் தலைநகர் ஆகவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. என்னிச்சையாக இந்தக் காரியத்தைச் செய்துவிட்டேன் என்று யாரும் குறைசொல்லாமல் இருக்க, இந்தப் பந்தோபஸ்தைத் தேடிக்கொள்கிறேன்.

முன்பே கூறிஇருக்கிறேன் என்னிடமிருப்பதாகச் சொல்லப்படும் திறமைகளுக் கெல்லாம் காஞ்சிபுரம்தான் காரணம் என்று. குறைகள் ஏதாவது இருப்பின் இங்கே பிறந்தும் இப்படிப்பட்ட