பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


குறைகள் இருக்கிறதே என்று வருத்தப்பட வேண்டாம். காஞ்சிபுரம் தலைநகர் ஆவதால், மக்கள் பொறுப்பும் அதிகமாகிறது. இங்கே தொழில்வளம் பெருக, வாணிபம் கல்வி வசதி வளர அதிக வாய்ப்புகள் ஏற்படவேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னையில் இருந்ததால் காரியங்கள் தாமதமாக நடந்ததென்று மக்கள் கருதலாம். இனி அவர் காஞ்சிக்கே வந்திருப்பதால், வேண்டிய வளர்ச்சிகளை தேவைகளை, விரைவாகவும், விரிவாகவும் அறிந்து செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. சிற்றுார்களுக்கெல்லாம் செல்லும் வாய்ப்பு இருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சியில் இன்று வறுமை தாண்டவமாடுகிறது. நோய்வாய்ப்பட்ட வன் முன்னால் உண்டவிருந்தை நினைப்பதுபோல, வறுமை வாய்ப்பட்டவர்கள் பழைய நினைப்பை நினைக்கத்தோன்றுகிறது. அப்படிபட்ட வறுமையை ஒட்டக் கைத்தறி நெசவாளர்களும் விவசாயிகளும் தங்கள் தங்கள் தொழில்களை நிலைநிறுத்திக்கொள்ள வளமான வாழ்வை அவர்களுக்குப் பெற்றுத் தர மாவட்ட ஆட்சித் தலைவரும் பிற அதிகாரிகளும் கடமை ஆற்றவேண்டும். மக்களுடன் பழகி குறைகளை அறிந்து அவற்றைத் தீர்க்கும் வகையில் சர்க்கார் அதிகாரிகள் பணியாற்றினால், மாநிலத்தில் ஆளுகின்ற சர்க்காருக்கும் சிறப்புவரும். கிராம மக்கள் வரும்போது, அவர்களே அன்புடன் வரவேற்றுக் காரியங்கள் செய்யக் கூடியதாக இருந்தால், வாக்களித்து இயலாததாக இருந்தால் இதமாக எடுத்துக் கூறி விளக்கி அனுப்பவேண்டும்.