பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105


தாமத நிலையைத் தவிர்த்திடும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டால் உண்மையான ஜனநாயகத்தின் பலனை மக்கள் அனுபவிக்க முடியும்.

ஒவ்வொரு சர்க்கார் அலுவலகமும் ஜனநாயகத்தின் பயிற்சிக் கூடமாக ஆகவேண்டும். அப்போது தான் ஜனநாயகம் வளரும். பள்ளிக்கூடங்களில் கல்லூரிகளில் ஆப்ரகாம்லிங்கன், காந்தியடிகள், கென்னடி ஆகியோர் ஜனநாயகத்தைப் பற்றிக் கூறியதை மேற்கோள் காட்டி விடுவதால் மட்டும் ஜனநாயகம் வளர்ந்துவிடாது. ஒவ்வொரு சர்க்கார் துறை அதிகாரியும் ஜனநாயகத்தை வளர்க்கும் முறையில் பணியாற்ற வேண்டும். ஜனநாயகத்தை வளர்க்கும் துறையில் சர்க்கார் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றவேண்டும்.

சிங்காரச் சென்னையிலிருந்து, கடற்கரை காற்று வீசும் சென்னையிலிருந்து பதிவுபெறாத ஊழியர்களைக் கதகதப்பான இந்த இடத்திற்கு மாற்றியது பற்றிச் சிலர் கவலைப்படலாம். கடற்கரைகாற்று இங்கு இல்லை. ஒரு புறம் வேகவதியும் மறுபுறம் பாலாறும் இருக்கின்றன. அவற்றை நீரோட்டம் உள்ளதாக ஆக்கினால் சென்னையை விடக் குளிர்ந்த காற்றை இங்கே அனுபவிக்கலாம்.

வேகவதித்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு என்ன காரணத்தாலோ நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் அத்திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால்,கடல்

F–14