பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அவைகளில் ஒன்று, இந்தப் புதிய சூழ்நிலைக் கேற்ப உங்களை நீங்கள் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துரைக்கும் அறிவுரையே சிறந்தது. நீங்கள் கூறுவதே நல்வழி என்று மக்கள் நம்பும்படிச் செய்யவேண்டும். அது ஒருகலை, அந்தக் கலையில் போலீஸ் படையினர் தங்களைச் பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும். இது மிகக் கடினமானது. ஆல்ை, மிக அவசியமானது. அண்மைக் கால நிகழ்ச்சி களில் இந்தக் கலையை நீங்கள் பயின்று விட்டீர்கள் என்னும் நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது. பெரிய மே த ல் க ளே த் தவிர்த்திருக்கிறீர்கள். இந்த ஆற்றலை, இந்தப் போக்கை நீடித்துக் கடைப் பிடித்து வரும்படி உங்களை நான் வேண்டுகிறேன். கல்லுரி மாணவர்களானலும் அல்லது வேறு பல துறைகளால் பணியாற்றியவர்களானுலும் அவர் கணிடையேயும் உங்கள் வீட்டுப் பிள்ளைகள் இருப் பார்கள் அல்லவா ? தங்களில் ஓர் அங்கமாகவே போலீஸ் படையினர் இயங்குகிருர்கள் என்பதை மக்களும் உணர்ந்து, அவர்களே உயர்ந்த மதிப்பில் வைத் திருக்க வேண்டும். இந்த நிலை இருந்தால்தான், போலீசார் திறம்படச் செயலாற்றவும் மக்களின் ஒத்துழைப்பைப் பெறவும் முடியும். வகைப்பாடு : ஆட்சி-காவல் துறை 7-12-68 அன்று சென்னையில் நடைபெற்ற மாநிலக் காவல்துறை விண்யாட்டுப் பந்தங் விழா விற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.