114
மாறுபட்ட கருத்துடையவர்களும், தமிழ் மொழிப் பிரச்சினையில் இன்று ஒன்று படுகிறார்கள். 58
மேலை நாடுகளில் ஒரே புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளைக் கழித்து விட முடியும். 59
மொழி பெயர்க்கும் பொழுது, கருத்துக்களைத் திரட்டித் தர வேண்டும். 47
வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சியில், இன்று வறுமை தாண்டவமாடுகிறது. 104
ஜனநாயகத்திற்கு மக்களால் எந்தவித ஆபத்தும் இல்லை. 72
ஜனநாயகமானது, பல்வேறு பிரச்சினைகளைக் கிளறி விடுகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை அவைகளில் ஒன்று. 109



அய்யாவுக்கு ஓர் அன்புப் பரிசு
நெடுந்தொலைவு போன மகன் திரும்பத் தந்தையைப் பார்க்க வரும் போது, கையில் கிடைத்ததை வாங்கி வந்து தருவான்.
அதே போல, இன்று பெரியாரைப் பார்க்க வந்திருக்கின்ற நானும் ஓர் அன்புப் பரிசை—கனியை—ஏதோ, என்னால் இயன்றதைக் கொண்டு வந்திருக்கிறேன்.
சுயமரியாதை இயக்கத் திருமணங்களை நடத்திச் சாதி ஒழிப்புக்காகப் பெரியார் பாடுபட்டு வருகிறார்.
பகுத்தறிவுத் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் நாட்டில் ஏராளமாக நடைபெற்றிருக்கின்றன.
இந்தத் திருமணங்களைச் செல்லுபடியாக்கச் சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வரப் போகிறோம் என்ற நல்ல செய்தியை—அன்புப் பரிசை—கனியை—பெரியாரிடம் அளிக்கிறேன்.
—அண்ணா, 1967